search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Makkal Katchi"

    மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகவும், தமிழகத்தில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராகவும் வலியுறுத்தி 108 நாள் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது. #Rajinikanth #HinduMakkalKatchi
    ஓசூர்:

    மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகவும், தமிழகத்தில் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராகவும் வலியுறுத்தி 108 நாள் பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி தொடங்கி உள்ளது.

    ஓசூரில் தொடங்கிய இந்த பிரசார பயணம் ரஜினியின் பூர்வீக கிராமமான நாச்சிக்குப்பத்தில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்கிறார்கள்.

    இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:-

    மி‌ஷன் 2019 என்ற தலைப்பில் ஆன்மீக அரசியல் பிரசார பயணம் தொடங்கப்பட்டு உள்ளது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சி முடிவுக்கு வந்து ஆன்மீக அரசியல் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக ரஜினி முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது.

    எங்கள் பிரசார குழுவினர் 108 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்வார்கள். அந்த பிரசார வேனில் மோடியின் சாதனை பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #Rajinikanth #ArjunSampath #HinduMakkalKatchi
    திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினிகாந்த் முதலமைச்சராக வந்தால் பெரும் மாற்றம் ஏற்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். #Rajinikanth #ArjunSampath
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அரசின் அனைத்து நிபந்தனைகளையும் இந்து மக்கள் கட்சி ஏற்கிறது. ஒரு சில இடங்களில் காவல்துறையின் அதிகப்படியான கெடுபிடிகளை மீறி விழா நடத்திய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஆன்மிக அரசியல் குறித்து பிரசாரம் செய்யும் விதமாக இன்று (நேற்று) முதல் 108 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மத்தியில் ஆளும் மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா அரசின் சாதனை குறித்து 1 லட்சம் துண்டுபிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.


    தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வரவேண்டும். அவர் வந்தால் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும்.

    தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்த கூடாது, அதற்கு நிதி அளிக்க கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளுக்கு எங்களது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நதி தாய்க்கு நாம் விழா எடுத்து நடத்த வேண்டும். எனவே அரசு இந்த விழாவிற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் ஓட அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபத்திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #ArjunSampath
    பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.

    கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கும் ராமன் காணவில்லை.

    இதனைத்தொடர்ந்து அனிதா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் இது குறித்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் தொங்கிய பிணத்தை பார்த்த போது அது மாயமான ராமன் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து ராமனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை அரிந்ததும் ராமனின் மனைவி அனிதா மற்றும் அண்ணன் தேவா மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய ராமனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அவரது உடல் அழுகியநிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    பின்பு தாசில்தார் ஆறுமுகம் முன்னிலையில் அங்கேயே ராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் ராமனுக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக அவரை யாராவது கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து மக்கள் கட்சி பிரமுகர் தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
    திசையன்விளை:

    திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1967-ல் தி.மு.க., காமராஜரை தோற்கடித்தது. அதன்பிறகு தேசிய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று வரை அதே நிலை தொடர்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சி நடத்துகிற ஊழல் ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    ஆன்மீக அரசியல் தான் காமராஜர் ஆட்சி. காமராஜரை தோற்கடித்த இந்த தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். ஊழல் இல்லாத கட்சி என்றால் ரஜினியின் ஆன்மீக அரசியல் கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


    தமிழ்நாட்டில் சிலை திருட்டை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். சிலை திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சிலை திருட்டை தடுக்க சிறப்பு காவல்படை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் அரசு பாகுபாடு பார்க்கக்கூடாது. இந்து ஏழை மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது தென்மண்டல பொதுச் செயலாளர் கார்த்தீசன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகவேல், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக திசையன்விளையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்தார். #ArjunSampath #Rajinikanth
    சோழவரம் அருகே கார் வெடிகுண்டு வீசி தாக்கியதாக நாடகமாடியதாக இந்து மக்கள கட்சி பிரமுகர் உள்ளட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவள்ளூர் :

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

    தன் காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் காளிகுமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சிபி சக்கரவர்த்தி கூறுகையில், ‘விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருக்கிறார். இதுதொடர்பாக காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார். #BombThrownDrama
    ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிராக விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்வதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Rajinikanth #Arjunsampath
    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் மணல் கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொல்லப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

    தமிழக அரசு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஆதி திராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இன்னும் அங்கு இரட்டை குவளை முறை தான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இதுகுறித்து திருமாவளவன் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.


    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கமல், ரஜினி மீது தரக்குறைவான விமர்சனங்களை கூறி வருகிறார். ரஜினி பட விழாவில் அவர் பேச்சுக்கு எதிராக விமர்சித்து ஜெயக்குமார் சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்.

    ஆனால் சமீபத்தில் வெளியான ‘‘இருட்டு அறையில் முரட்டு குத்து’’ என்ற ஆபாசப்படம் குறித்து தமிழக அரசு கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகம் வஞ்சிக்கப்படும். ஆனால் அங்கு தனிப்பெரும்பான்மையோடு பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜனதா பெரும் வெற்றி பெறும்.

    வருகிற 29-ந் தேதி இந்து வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து இந்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களால் சிறுகுறு வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Arjunsampath
    ×