search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harley Davidson"

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய X 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹார்லி பைக் சீனா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புதிய எண்ட்ரி-லெவல் X 350 மோட்டார்சைக்கிளை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. சீனாவை சேர்ந்த QJ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஹார்லி X 350 மோட்டார்சைக்கிள் விவரங்கள் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் சீன வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

    தோற்றத்தில் புதிய X 350 மாடல் ஸ்போர்ட்ஸ்டெர் XR1200X போன்றே காட்சியளிக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் நிறுத்தப்பட்டு விட்டது. ஹார்லி X 350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், சிங்கில்-பாட் கன்சோல் கொண்டிருக்கிறது. இத்துடன் டியர் டிராப் வடிவ டேன்க் உள்ளது. இந்த மாடலின் முழு அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

     

    எனினும், இதில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடலில் 353சிசி, இன்லைன் டுவின் சிலிண்டர் என்ஜின் மற்றும் லிக்விட் கூலிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 36.2ஹெச்பி பவர், 31 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

    புதிய X 350 மாடலில் பிரீமியம் பாகங்கள் உள்ளன. இந்த மாடல் 17 இன்ச் அலாய் வீல்கள், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் கொண்டிருக்கிறது. பிரேகிங்கை பொருத்தவரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் சிங்கில் ரோட்டார் மற்றும் பிஸ்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சீன சந்தையில் புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடலின் விலை 33 ஆயிரத்து 388 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 93 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் X 350 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே புது மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட இருக்கிறது.
    • புது மாடல்கள் வெளியீட்டுக்கு முன் அவற்றின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2023 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நைட்ஸ்டர் S மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் S மாடலும் நைட்ஸ்டர் மாடல் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், புதிய நைட்ஸ்டர் S மாடலின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அதன்படி புதிய நைட்ஸ்டர் S மாடலில் பில்லியன் சீட் மற்றும் பில்லியன் ஃபூட்ரெஸ்ட் வழங்கப்படுகிறது. நைட்ஸ்டர் ஸ்டாண்டர்டு எடிஷன் மாடலில் இவை இரண்டும் இடம்பெற்று இருக்காது. மேலும் புதிய நைட்ஸ்டர் S மாடல் சற்றே வித்தியாசமான வீல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த மாடல் கிலாஸ் பெயிண்ட் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. வெளிப்புறம் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நைட்ஸ்டர் S மாடலில் 975சிசி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

    Photo Courtesy: motorcycle.com

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார்சைக்கிள் உருவாக்குவதை ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது.
    • புது இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் மோட்டார்சைக்கிள் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றியுடம் தகவல் வெளியிட்டு உள்ளது.

    அடுத்த இரு ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பிரீமியம் பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் நிரன்ஜன் குப்தா முதலீட்டாளர் கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து புது பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் புது மோட்டார்சைக்கிள் மிடில்வெயிட் பிரிவில், 350சிசி திறன் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. புது மாடல் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லியின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவை கவனித்து வருகிறது. மேலும் நாடு முழுக்க டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 300S மற்றும் எக்ஸ்-பல்ஸ் 400 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என நிரன்ஜன் தெரிவித்தார்.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
    • புது மாற்றத்தின் படி ஹார்லி பைக் விலை இந்தியாவில் அமலுக்கு வந்து இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேன் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடல்களின் விலை தற்போது ரூ. 4 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மாற்றத்தின் படி ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 16 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 12 லட்சத்து 91 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பேன் அமரிக்கா 1250 ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 11 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 17 லட்சத்து 11 ஆயிரம் என குறைக்கப்பட்டு இருக்கிறது.


    தற்போது விலை குறைக்கப்பட்டு இருக்கும் மாடல்கள் 2021 ஆண்டை சேர்ந்தது என்பதோடு இந்த மாடல்கள் குறைந்த யூனிட்களே விற்பனைக்கு கிடைக்கின்றன. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலான பேன் அமெரிக்கா 1250 மாடலில் 1252 சிசி, வி ட்வின் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 150.19 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடலில் அட்பாடிவ் லைட்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் ரைடு ஹைட், ஸ்போக்டு வீல்கள், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் இந்த பிரிவில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ 850GS, டிரையம்ப் டைகர் 900 GT உள்ளிட்ட மாடல்களை விட ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 விலை குறைக்கப்பட்டு இருப்பது பயனர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த மாடலில் சக்திவாய்ந்த 975சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் இந்தியா இணைந்து முற்றிலும் புதிய நைட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. புதிய ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள், பாகங்கள் மற்றும் அக்சஸரீக்களை அதிகாரப்பூர்வமாக வினியோகம் செய்யும் பொறுப்பை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்று நடத்தி வருகிறது. புதிய ஹார்லி டேவிட்சன் மாடல் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளன.


    இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் விவிட் பிளாக் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் கன்ஷிப் கிரே ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

    ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் ரெட்லைன் ரெட் ரூ. 15 லட்சத்து 13 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


    இந்த மாடலில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ரெவல்யுஷன் மேக்ஸ் 975T, 975சிசி, லிக்விட் கூல்டு, வி-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் 41 மில்லிமீட்டர் ஷோவா முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு டயர்களிலும் சிங்கில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

    இத்துடன் மூன்று வித ரைடிங் மோட்கள், ஏபிஎஸ், என்ஜின் பிரேக்கிங் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வார நிகழ்வில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் ஆப்லங்-வடிவ ஹெட்லேம்ப், காம்பேக்ட் முன்புற பெண்டர், 11.8 லிட்டர் பியூவல் டேன்க், டால்-சீட் எக்சாஸ்ட்கள் உள்ளன.

     ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்

    இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் விவிட் பிளாக், மிட்நைட் க்ரிம்சன் மற்றும் ஸ்டோன் வாஷ்டு வைட் பியல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, 60-டிகிரி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஐந்து ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., லீன்-சென்சிடிவ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது. #HarleyDavidson



    அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் என்ற இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    அதன் படி முந்தைய ஃபார்டி எய்ட் மாடலை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக ஸ்பெஷல் மாடல் உருவாகி இருக்கிறது. பெட்ரோல் டேங்கிலேயே சில கிராபிக்ஸும், சக்கரம் முழுமையான கருப்பு நிறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மிக உயரமான ஹேண்ட் பார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

    ஓட்டுபவரின் வசதிக்காக இதில் சற்று முன்னோக்கி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 1,202சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஏர் கூல்டு வி-ட்வின் என்ஜின் ஆகும். இது 96 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



    ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடல் ஆகும். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் 1,868 சி.சி. திறன் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மில்வோகி எய்ட் 114 என்ஜின் உள்ளது. அது 163 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. 

    ஹார்லி டேவிடசன் கிளைட் ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் 362 கிலோ எடையுடன், 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட போதிலும் இதன் விலையை ரூ.10.58 லட்சமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் விலை ரூ.30.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வரி தகராறு காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பலர் புறக்கணிக்கும் முடிவில் இருக்கின்றனர். இது சிறப்பான ஒன்று என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்புகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அதிரடியாக உயர்த்தினார்.

    இதனால், போட்டி போட்டுக்கொண்டு மேற்கண்ட நாடுகளும் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த வரி அதிகரிப்பு தகராறுகளால் வணிக யுத்தம் நிகழும் சூழல் உருவானது. இந்த தகராறுகளின் ஒரு பகுதியாக அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரியை 31 சதவிகிதமாக ஐரோப்பிய நாடுகள் கூட்டின.

    இதனால், அமெரிக்காவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியிருந்தார்.

    எனினும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முடிவில் உறுதியாக இருந்தது. தனது ராஜ தந்திரங்கள் பலிக்கவில்லை என டிரம்ப் நினைத்தாரோ என்னவோ, தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு எதிராக கருத்து வெளியிட தொடங்கியுள்ளார்.

    ‘நிறைய ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். சிறப்பு! அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் நம்மை நோக்கி வருகின்றனர். உண்மையில் ஹார்லி நிறுவனத்தின் முடிவு தவறான ஒன்று’ என டிரம்ப் தற்போது ட்வீட் செய்துள்ளார். 

    இருமுனை வரி நெருக்கடியால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள ஹார்லி டெவிட்சன் நிறுவனத்துக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #HarleyDavidson

    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் வர்த்தக போரை தொடங்கியுள்ளன. இந்தியாவும், சீனாவும் தற்போது வர்த்தக அளவில் ஒன்றாக செயல்படும் வகையில் வரிகளை குறைப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதோடு அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்துள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹார்லி டெவிட்சன். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் இந்நிறுவனம், இரும்பு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்களுக்கு அதிக வரி செலுத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது தயாரித்த இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ய கூடுதல் வரியை செலுத்த வேண்டிய நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இருமுனை வரி நெருக்கடியால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



    இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற இருப்பதாக ஹார்லி டெவிட்சன் நிறுவனம் அறிவித்தது. அதோடு ஆசியா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு தனது நிறுவனத்தை மாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளது. அந்நிறுவனத்தின் இந்த முடிவினால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியேற கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு நிறைய செய்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் டிரம்ப்பின் கோரிக்கையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய தயாராக இல்லை என கூறப்படுகிறது. #DonaldTrump #HarleyDavidson
    அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தனது வாகன உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
     



    அமெரிக்காவின் பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் அமெரிக்காவில் தனது வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஐரோப்பிய யூனியனில் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படு இருப்பதை தொடர்ந்து ஹார்லி டேவிட்சன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் புதிய வரி கொள்கையால் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் அபயாம் அதிகரித்து இருக்கிறது. 

    புதிய வரிமுறையால் ஆண்டுக்கு 90 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது உற்பத்தை அமெரிக்கா அலாத வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.



    ஏற்கனவே அந்நிறுவனம் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் உள்ளிட்ட மாடல்களை உற்பத்தி செய்வதால், தனது உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் முடிவுக்கு டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ ஹார்லி டேவிட்சன் 100% அமெரிக்காவில் இருக்க வேண்டும், அந்நிறுவனத்துக்கு வெற்றி தந்த மக்களுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன். மற்ற நிறுவனங்கள் அவர்கள் சார்ந்த இடத்துக்கு திரும்பி வருகின்றனர். நாங்கள் இதை மறக்க மாட்டோம், மேலும் உங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் மகிழ்ச்சியடைந்திருக்கும் போட்டியாளர்களும் மறக்க மாட்டார்கள்' என குறிப்பிட்டு இருக்கிறார்.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.

    இதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை  சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. 

    இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
    ×