search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் அறிமுகமான இரு ஹார்லி மோட்டார்சைக்கிள்கள்
    X

    இந்தியாவில் அறிமுகமான இரு ஹார்லி மோட்டார்சைக்கிள்கள்

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகிறது. #HarleyDavidson



    அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மற்றும் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் என்ற இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    அதன் படி முந்தைய ஃபார்டி எய்ட் மாடலை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக ஸ்பெஷல் மாடல் உருவாகி இருக்கிறது. பெட்ரோல் டேங்கிலேயே சில கிராபிக்ஸும், சக்கரம் முழுமையான கருப்பு நிறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மிக உயரமான ஹேண்ட் பார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

    ஓட்டுபவரின் வசதிக்காக இதில் சற்று முன்னோக்கி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் 1,202சி.சி. திறன் என்ஜின் கொண்டிருக்கிறது. இது ஏர் கூல்டு வி-ட்வின் என்ஜின் ஆகும். இது 96 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



    ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய மாடல் ஆகும். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் 1,868 சி.சி. திறன் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மில்வோகி எய்ட் 114 என்ஜின் உள்ளது. அது 163 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. 

    ஹார்லி டேவிடசன் கிளைட் ஸ்பெஷல் மோட்டார்சைக்கிள் 362 கிலோ எடையுடன், 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஃபார்டி எய்ட் ஸ்பெஷல் மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட போதிலும் இதன் விலையை ரூ.10.58 லட்சமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது. ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மாடல் விலை ரூ.30.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×