search icon
என் மலர்tooltip icon

    பைக்

    மோட்டார்சைக்கிள் விலையை அதிரடியாக குறைத்த ஹார்லி - எவ்வளவு தெரியுமா?
    X

    மோட்டார்சைக்கிள் விலையை அதிரடியாக குறைத்த ஹார்லி - எவ்வளவு தெரியுமா?

    • ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
    • புது மாற்றத்தின் படி ஹார்லி பைக் விலை இந்தியாவில் அமலுக்கு வந்து இருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேன் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடல்களின் விலை தற்போது ரூ. 4 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை மாற்றத்தின் படி ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 16 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 12 லட்சத்து 91 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பேன் அமரிக்கா 1250 ஸ்பெஷல் மாடல் விலை ரூ. 21 லட்சத்து 11 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ. 17 லட்சத்து 11 ஆயிரம் என குறைக்கப்பட்டு இருக்கிறது.


    தற்போது விலை குறைக்கப்பட்டு இருக்கும் மாடல்கள் 2021 ஆண்டை சேர்ந்தது என்பதோடு இந்த மாடல்கள் குறைந்த யூனிட்களே விற்பனைக்கு கிடைக்கின்றன. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலான பேன் அமெரிக்கா 1250 மாடலில் 1252 சிசி, வி ட்வின் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 150.19 ஹெச்பி பவர், 128 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 மாடலில் அட்பாடிவ் லைட்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் ரைடு ஹைட், ஸ்போக்டு வீல்கள், செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் இந்த பிரிவில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ 850GS, டிரையம்ப் டைகர் 900 GT உள்ளிட்ட மாடல்களை விட ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா 1250 விலை குறைக்கப்பட்டு இருப்பது பயனர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும்.

    Next Story
    ×