என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
‘ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை புறக்கணிக்க பலர் திட்டம், சிறப்பான ஒன்று’ - டிரம்ப் ட்வீட்
By
மாலை மலர்13 Aug 2018 10:45 AM GMT (Updated: 13 Aug 2018 10:45 AM GMT)

வரி தகராறு காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பலர் புறக்கணிக்கும் முடிவில் இருக்கின்றனர். இது சிறப்பான ஒன்று என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். #Trump #HarleyDavison
வாஷிங்டன்:
அமெரிக்க தயாரிப்புகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரியை சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அதிரடியாக உயர்த்தினார்.
இதனால், போட்டி போட்டுக்கொண்டு மேற்கண்ட நாடுகளும் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்த வரி அதிகரிப்பு தகராறுகளால் வணிக யுத்தம் நிகழும் சூழல் உருவானது. இந்த தகராறுகளின் ஒரு பகுதியாக அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரியை 31 சதவிகிதமாக ஐரோப்பிய நாடுகள் கூட்டின.
இதனால், அமெரிக்காவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதனை சரிகட்டும் வகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியிருந்தார்.
எனினும், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முடிவில் உறுதியாக இருந்தது. தனது ராஜ தந்திரங்கள் பலிக்கவில்லை என டிரம்ப் நினைத்தாரோ என்னவோ, தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு எதிராக கருத்து வெளியிட தொடங்கியுள்ளார்.
‘நிறைய ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். சிறப்பு! அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் நம்மை நோக்கி வருகின்றனர். உண்மையில் ஹார்லி நிறுவனத்தின் முடிவு தவறான ஒன்று’ என டிரம்ப் தற்போது ட்வீட் செய்துள்ளார்.
Many @harleydavidson owners plan to boycott the company if manufacturing moves overseas. Great! Most other companies are coming in our direction, including Harley competitors. A really bad move! U.S. will soon have a level playing field, or better.
— Donald J. Trump (@realDonaldTrump) August 12, 2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
