search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery store"

    • சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (36). இவர் பவானி-ஈரோடு மெயின் ரோடு காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் சொந்தமாக மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த பீடி, சிகரெட், சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் சுடலை புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் நடைபெற்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சித்தோட்டில் மின் பொறியாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற பரபரப்பு அடங்கும் முன் காளிங்கராயன பாளையத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகள் பதிவு கொண்டு குற்றவாளிகள் யார் என விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் மாரியப்பசாமி அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர் கடை உள்ளே சென்று ரூ.20ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் மாரியப்பசாமி (வயது 55). இவர் அதே பகுதியில் தனது வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை இவர் வீட்டின் உள்ேள சென்றிருந்தபோது கடைக்கு வந்த மர்ம நபர் கடையில் ஆள் இல்லாததை கண்டு கடை உள்ளே சென்று ரூ.20ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    பின்னர் கடைக்கு வந்த மாரியப்பசாமி கல்லா பெட்டி திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கடைக்கு வந்து பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன் பணத்தை தாளமுத்து நகர் சந்துரு (20)என்பவரிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

    • தனசேகர் சங்கர்நகர்-தென்கலம் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வந்தார்.
    • பலத்த காயமடைந்த தனசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து சர்க்கிள் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 60).

    வணிக வளாகம்

    இவர் சங்கர்நகர்-தென்கலம் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது கடையின் அருகே பேக்கரி மற்றும் மருந்தகம் உள்ளது. இதன் மேல் தளத்தில் 6 கடைகள் பூட்டி கிடக்கிறது.

    சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்த வணிக வளாகம் ஆங்காங்கே வெடிப்பு விழுந்து காணப்பட்டது. இதனால் மேல் தளத்தில் உள்ள 6 கடைகளும் காலி செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தனசேகர் பலசரக்கு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்ல கடையின் முகப்புக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் நடைபாதை இடிந்து விழுந்தது.

    பரிதாப சாவு

    இதில் தலையில் பலத்த காயமடைந்த தனசேகர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    தற்போது விபத்து நடந்த இந்த கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால் அதில் மீதி உள்ள கடைகளை உடனடியாக காலி செய்து விட்டு கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    • மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    திலாசு பேட்டையில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். புதுவை கதிர்காமம் ஆனந்தா நகர் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சக்தி வேல். இவர் புதுவை திலாசுபேட்டை வழுதாவூர் சாலையில் மளிகை கடை நடத்திவந்தார்.

    இரவு வியாபாரம் முடிந்து காலையில் மார்க்கெட்டில் பொருட்கள் கடன் வாங்கியதற்கு கொடுப்பதற்காக ரூ.1½ லட்சத்தை மளிகை கடையில் வைத்து பூட்டி விட்டு சக்தி வேல் வீட்டுக்கு சென்றார்.  வழக்கம் போல் சக்தி வேல் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் மளிகை கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்து கொண்டு திரும்பிச் செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்ட் டிஸ்க் மற்றும் டி.வி.ஆர்.யையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சக்தி வேல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மளிகை கடையின் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொள்ளை நடந்த மளிகைகடை பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ளதாகும். அப்படி இருக்கும் போது மர்ம நபர்கள் துணிகரமாக கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிருந்தது.
    • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள புதிய முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது28).

    இவர் அப்பகுதி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சரண்ராஜ் சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பாலமுருகன் கடையை திறக்க சென்ற போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பூபாலராய புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் கடையை அடைத்து விட்டு சென்றார். நேற்று கடையை திறக்க சென்ற போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பெருமாள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பெருமாள் வழக்கம் போல கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • மளிகை கடைக்காரர் வீட்டில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • இது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் லயன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55).

    இவர் நேற்று இரவு 11 மணி அளவில் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 60 பவுன் நகையை திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேளரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

    மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை மட்டுமின்றி பத்திரங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    எனவே இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் உறவினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    • வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதலபாண்டியன் (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல அவர் கடையை திறக்க சென்றார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கடைகளில் கொள்ளைகள் நடந்து வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரியில் மனைவி கண்முன்னே மளிகை கடைகாரரிடம் செல்போன் மற்றும் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் வழிப்பறி செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சாமிசெட்டி தெருவை சேர்ந்தவர் செய்யது(37), இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். 

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி தனது சொந்த வேலையாக மனைவியுடன் தனது பைக்கில் கிருஷ்ணகிரிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி செல்லும்போது கிருஷ்ணகிரியில் சென்னை பை-பாஸ் சாலையில் தண்டேகுப்பம் பகுதியில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 25 வயது மதிக்கதக்க 2வாலிபர்கள் இவர்களை வழி மறித்து செய்யது-விடமிருந்த பணம் ரூ700-யும் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்து கொண்டு தலை மறைவாகி விட்டனர். 

    பின்னர் அதிர்ச்சியடைந்த செய்யது கிருஷ்ணகிரி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து பைக் கொள்ளையர்களை தேடி வருகிறார்.
    திருப்பூர் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பொருட்களை யாராவது பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது பாலித்தீன் மொத்த விற்பனை கடைகளுக்கு சென்று சோதனையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதிகளில் உள்ள சில கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகஅளவு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்படி அங்கு விரைந்து சென்ற அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் அங்குள்ள ஒரு மளிகை கடையில் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது போல பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PlasticBan
    நெய்வேலியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 26-வது வட்டம் பாய்லர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு கணேசன் வெளியூருக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மளிகை பொருட்கள் உள்பட பல பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கணேசன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் வெளியூரில் இருந்து நெய்வேலிக்கு வந்தார். கடைக்கு சென்று கணேசன் பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளைபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன மளிகை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.

    பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கணேசன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ×