search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடையின்"

    • கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோபி:

    கோபி அடுத்த ஆண்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவர் மோடூர்பாளையம் பிரிவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு மோகன்ராஜ் சென்றுவிட்டார். இன்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டிகளில் இருந்த ரூ.2000 பணம் மற்றும் 20 பீடிக்கட்டுகள் திருட்டு போய் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் நள்ளிரவில் மோகன்ராஜ் கடையில் புகுந்த மர்ம நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. கொள்ளை நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் இல்லை.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
    • யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறி ப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீபகாலமாக யானைகள் உணவு, தண்ணீ ரை தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேத ப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல் வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை பீதி அடைய செய்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து கட்டிடங்களை சேதப்படுத்தி யும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்து டனேயே இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பில்லாத தக்காளியை தின்று ருசித்து உள்ளது.

    கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (36). இவர் பவானி-ஈரோடு மெயின் ரோடு காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் சொந்தமாக மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே இருந்த பீடி, சிகரெட், சோப்பு மற்றும் மளிகை பொருட்கள் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் சுடலை புகார் கொடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் நடைபெற்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சித்தோட்டில் மின் பொறியாளர் வீட்டில் முகமூடி கொள்ளையர் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற பரபரப்பு அடங்கும் முன் காளிங்கராயன பாளையத்தில் மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ள்ளதாகவும் சி.சி.டி.வி. காட்சிகள் பதிவு கொண்டு குற்றவாளிகள் யார் என விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ×