என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரிடம் விசாரணை

- மளிகை கடைக்காரர் வீட்டில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
- இது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் லயன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55).
இவர் நேற்று இரவு 11 மணி அளவில் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 60 பவுன் நகையை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேளரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை மட்டுமின்றி பத்திரங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
எனவே இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் உறவினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.