search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் 293 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

    முன்னதாக மாமல்ல புரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட்ட ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாண வர்களுடன் செஸ் விளை யாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • மதுரை மாநகராட்சி 2-வது மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 19-ந் தேதி(செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2-வது அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் 2-வ மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம்.

    சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், 5 பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக குடிநீர் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது.
    • குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டம் அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சிக்கு 497 பேட்டரி வாகனங்கள் வாங்கியதாக ஆவணங்கள் உள்ளது. இதில், தற்போது 202 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வாகனங்கள் சப்ளை செய்த நிறுவனம், அதை பெற்று கொண்ட அதிகாரிகள், பயன்படுத்த வழங்கிய அலுவலர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    குடிநீர் பிரச்னையில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டிகள் கணக்கெடுக்கப்பட்டு–ள்ளன. அவை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.குழாய் பதிப்பு பணிக்குப்பின் சாலை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நடைபெறும் இடங்களில் உரிய விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்.விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

    விடுபட்ட பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள் தகவல் அளிக்கலாம். குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.ஊட்டச்சத்து துறை மூலம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மாநக ராட்சியில் மக்கள் குறை கேட்புக்காக 155304 என்ற டோல் பிரீ எண் பெறப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் உள்ளிட்ட எந்த துறை குறித்த புகார்களும் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • குட்டம் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
    • மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில் தமிழக அரசின் அண்ணாகிராமமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். சமூகநல திட்ட தாசில்தார் பத்மபிரியா, துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ் வரவேற்று பேசினார். குட்டம் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    திசையன்விளையில் துணை கருவூலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து 101 மனுக்கள் பெறப்பட்டது. சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. முகாமில் திசையன்விளை வருவாய் ஆய்வாளர் துரைசாமி, குட்டம் கிராம நிர்வாக அலுவலர் சந்தனகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல்லில் வருகிற 7-ந்தேதி நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும்.
    • பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கை களைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நலன் கருதி அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் ஆகியோருடன் காலாண்டு நுகா்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பொது விநியோகத்திட்டம் தொடா்பான கோரிக்கை களைத் தெரிவிக்க விரும்பும் நுகா்வோா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலத்தில், 11-ந் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தளவாய்பட்டியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந் தேதி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    அதே நாளில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவ–லகத்தில் அமலாக்க அதிகாரி சுப்ரமணியன் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற தலைப்பில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

    அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் சந்தாதாரர்களுக்கும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.எண். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை வருகிற 8-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அதேசமயம் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்திலும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தெற்குமண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கான புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17-ந் தேதியாகும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்ப ப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்ப ந்தப்பட்ட அளவில் ஏற்க னவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப டமாட்டாது. குறைகளை "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்" ஜே.பிரதீப்குமார் உதவி இயக்குநர், அஞ்சல்துறைத்தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    pg.madurai@indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    ×