search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas leak"

    • தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அம்மோனியா கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. ஜனவரி 2-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    எண்ணூர் எண்ணெய் கழிவு தொடர்பான வழக்கையும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் அப்பகுதியில் உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது.

    அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டு உள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

    எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்கான குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

    கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கடந்த காலங்களில் இதே போல் பல முறை வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    எண்ணூர் உள்ளிட்ட வட சென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக் குட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

    சென்னை :

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தனியார் உர தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், ஆய்வுக்குழுவால் தொழிற்சாலையில் ஆய்வு செய்த பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    • தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக தனியார் உர தொழிற்சாலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேற்றிரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் சப்ளை பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    அமோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொணடு வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
    • காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    குனியமுத்தூர்:

    கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.

    இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.

    அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.

    இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

    மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் சந்திரா, செல்வி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் மீது தீ பரவியது.   இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  இதில் தீக்காயமடைந்த சந்திரா, செல்வி, கண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி அறிந்த தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • குடிநீர் உந்து நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயுக் கசிவு சீரமைக்கப்பட்டது.
    • பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம் மூலக்காட்டானுார் மாநகராட்சி குடிநீர் உந்து நிலையத்தில், குடிநீர் கலப்பதற்காக குளோரின் வாயுப் பகுதி உள்ளது. இந்த வாயுப் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள பகுதியில் இருந்தவர்களுக்கு லேசான கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலைய உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 11 தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து வாயுக் கசிவை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பாலக்காட்டில் இருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மணிநேரம் பணியில் ஈடுபட்டு, குளோரின் வாயுக் கசிவைத் தடுத்து நிறுத்தி நிலைமையை சீர் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.
    • ரசாயன வாயு கசிவு குறித்த தடயவியல் குழு ஆய்வு .

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு கல்லூரி ஆய்வகத்தில் இன்று ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஆய்வகத்தில் இருந்த 25 மாணவிகள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    பாதிக்கப்பட்ட மாணவிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த கல்லூரியில் இருந்த பிறதுறை மாணவிகளும் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறினர்.  இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.
    • இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் மாரநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மகன் சதீஷ்குமார், துரைசாமியின் வீட்டின் அருகிலேயே குடிசை அமைத்து அவரும் அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரது குடிசை வீடும் தென்னங்கீற்றால் மேயப்பட்டு, தகர சீட்டு போட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.

    காற்று வேகத்தின் காரணமாக அருகில் இருந்த சதீஷ்குமார் வீட்டு குடிசைக்கும் தீ பரவியது. 2 குடிசைகளும் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.

    இதனையடுத்து தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    தலைநகர் டெல்லி சென்றுள்ள முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
    அமராவதி:

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவு அருகிலுள்ள நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, அச்சுதாபுரம் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகள் மற்றும் என்.டி.ஆர். மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனே அழைத்துச் செல்லப்பட்டனர். மற்ற பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணிகள் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்த முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளிடம் கூறியதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

    தென்காசி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை இவரது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

    அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்புபடையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் கசிந்த் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #apartmentbuildinggasleak
    பெய்ஜிங்:

    சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்வான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இன்று அதிகாலை இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
    #apartmentbuildinggasleak
    ×