search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியாஸ் கசிவு"

    • மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
    • காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    குனியமுத்தூர்:

    கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.

    இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.

    அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.

    இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

    மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
    • உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்த கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் நிறைவடைந்தால் அந்த 2 எண்ணெய் கிணறுகளும் மூடப்பட்டது. இந்த எண்ணெய் கிணறு உள்ள பகுதியை சுற்றி சின்னகுறுவாடி, பெரியகுடி, அம்பத்தார் குளமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை காரியமங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் எண்ணெய் கிணறு உள்ள பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது அங்கு கியாஸ் வாசனை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் எண்ணெய் கிணறு அருகே சென்று பார்த்த போது மூடப்பட்ட எண்ணை கிணற்றிலிருந்து அதிகளவில் கேஸ் வெளியேறி வருவது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓஎன்ஜிசி துறை அதிகாரிகள் கேஸ் வெளியேறும் பகுதியினை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் சந்திரா, செல்வி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் மீது தீ பரவியது.   இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  இதில் தீக்காயமடைந்த சந்திரா, செல்வி, கண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி அறிந்த தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • திருப்பத்தூரில் கியாஸ் கசிவால் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
    • இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு மகளிர் போலீஸ் நிலையம் பின்புற பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.

    நேற்று வேலை முடிந்து வந்த தொழிலாளர்கள் வீட்டின் ஒரு அறையில் இரவு நேர சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ வேகமாக அருகே இருந்த சிமெண்ட் மூடையிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.

    இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ அணைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலா ளர்கள் தீ விபத்து நடந்த சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×