search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Training"

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
    • இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. இதில், ஏராளமான பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கவியரசு வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் மணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பணிக்கு தற்போது அரசின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வில் 15 பேர் தேர்வாகி உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர். குறிப்பாக போட்டி தேர்வு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஒருவர் காவல் துறையில் சேர்ந்து அஸ்தம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனவே, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    • சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    திருப்பூர் :

    சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு 621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம்1.6.2023 முதல்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கூடுதல் தன்னார்வ பயிலும் வட்டம் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை, எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4.5.2023 அன்று முதல் திங்கள் - வெள்ளி வரை தினமும் 2மணி முதல் 3.30 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்பில் மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    நாமக்கல் வேலை வாய்ப்பு மைய, தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2021-ம் ஆண்டு, போலீஸ் போட்டித் தேர்வில், 24 பேரும், 2022-ல் நடந்த எஸ்.ஐ. தேர்வில் 5 பேரும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.

    மேலும், 2022-ல் நடந்த போலீஸ் தேர்வில் 17 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 615 காலி பணியிடங்கள் கொண்ட டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.ஐ. எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நேரடியாக நடத்தப்பட உள்ளது.

    இலவச நேரடி பயிற்சி வகுப்பு, வரும், 12-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம். 

    • ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி .,பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஜூலை 2023-ல் நடைபெறும். 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்விற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 24.4.2023 திங்கள்கிழமையன்று இலவச பயிற்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

    எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு பல்லடம் சாலை, திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • 10-ந் தேதி தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள, இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்பட உள்ளது.

    மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப் பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் அலுவ லக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
    • தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.

    இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • கூன் வண்டு மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • தென்னை மரங்களைத் தாக்கும் கூன் வண்டின் சேதத்தின் அறிகுறிகள், கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் மையத்தின் (கே.வி.கே) தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 10-ந் தேதி காலை 10 மணிக்கு, தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் கூன் வண்டு மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இந்தப் பயிற்சியில், தென்னை மரங்களைத் தாக்கும் கூன் வண்டின் சேதத்தின் அறிகுறிகள், அதன் வாழ்க்கை சுழற்சி மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், அதாவது உழவியல் முறை, ராசயன முறை மற்றும் உயிரியியல் முறையில் கட்டுப்படுத்துதல் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • இசக்கி முத்து தமிழகம் முழுவதும் தேன் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.
    • பயத்தைபோக்குவதற்காக மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறேன்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மலையடிப் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது24). டிப்ளமோவில் விவசாய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக மலையடிபுதூரில் தேன் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் தேன் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்.

    இவருக்கு உறுதுணையாக அவரது தந்தை சேர்மத்துரை, தாயார் கமலா ஆகியோரும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தேனீக்கள் என்றால் கொட்டும் என்ற அதீத பயம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த பயத்தை போக்கும் விதமாக முகம் முழுவதும் தேனீக்களை பரவ விட்டு மக்கள் மத்தியில் விநோத விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.

    தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டொன்றுக்கு பல லட்ச ரூபாய் வருமானத்தை பெற இயலும் என்பதை முன்னிறுத்தி இவரது விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நேற்று மலையடிபுதூரில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடத்தினார்.

    இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தேனீக்கள் வளர்ப்பு குறித்து செயல் விளக்கமும் அளித்தார். இதுபற்றி இசக்கிமுத்து கூறியதாவது:-

    தேனீக்கள் வளர்ப்பை முழுமையாக ஆராய்ந்து செயல்பட்டால் தமிழகத்தில் விவசாய துறை கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இத்தொழிலுக்கு மாறும் நிலை உருவாகும். தேனீக்கள் நம்முடன் இயற்கையாக வளர்ந்து வரும் உயிரினம். தேனீக்கள் என்றால் கொட்டும் என்பது பொதுவான கருத்து.

    தேனீக்களை கண்டு பயப்படத் தேவையில்லை சாதா ரணமாக வீட்டில் வளர்க்கலாம். பயத்தைபோக்குவதற்காக மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இது போன்ற பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறேன். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி நடத்தி வழிகாட்டுகிறேன்.

    தேனீக்கள் விவசாயத்துடன் ஒன்றுபட்டது. தேனீக்களால் 60 சதவீத மகரந்தச் சேர்க்கை உருவாகி இயற்கையின் விவசாயமாக காய்கறிகள், பழங்கள் கிடைக்கிறது. கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி கிடைக்கும் விவசாய உற்பத்தியால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வீடுகள் தோறும் தேனீக்கள் வளர்ப்பதற்கான கூண்டுகளை விற்பனை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளேன்.

    தேனீக்கள் வளர்ப்பால் விவசாயம் செழிப்பாகும் என்பதாலும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதாலும், இத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்றார். கல்லூரி மாணவர்கள் கூறுகையில் , இந்த பயிற்சியினால் தேனீக்கள் குறித்த அச்சம் நீக்கியதாக தெரிவித்தனர்.

    • 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயின்ற 41 தேர்வர்களில் 15 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும், எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி, சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 4-ந்தேதி காலை 7மணிக்கு தொடங்குகிறது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
    • பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள உள்ளஎஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டி.என்.பி.எஸ்.சி., எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கங் லோயர் டிவிசனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டெண்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பதவிகளில் 4500 பணிக்காலியிடங்களுக்கு 6.12.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எஸ்.எஸ்.சி.(சிஎச்எஸ்எல்) தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 04.1.2023.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 8.12.2022 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும்மாறும் கூடுதல்விவரங்களுக்கு 0421-2971152 மற்றும் 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    • இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு இலவசபயிற்சி வகுப்பு நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்

    கரூர்:

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் காகித நிறுவன மனிதவள அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக, காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான இரண்டு மாத காலங்கள், தமிழ்நாடு அரசு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வகுப்புகளில் ஆலை வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த 50 பேர் பயிற்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் உணவு, தேநீர், பால் மற்றும் சத்துணவுகள் வழங்கப்படும் மேலும், உடல் தகுதித்திறன் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சுல்வி வல்லுனர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர், ஆசிரியை பெருமக்களை பாராட்டும்வி தமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • மத்திய பணியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி நடந்தது.
    • இப்போட்டித் தோ்வுகளுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    மத்திய அரசு சாா்பில் பல்வேறு துறைகளுக்கான உதவிப்பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித்துறை ஆய்வாளா், உதவியாளா் மற்றும் தபால்துறை உதவியாளா் போன்ற 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பவதற்கான போட்டித்தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இளங்கலை பட்டப்ப டிப்பில் தோ்ச்சி பெற்ற வா்கள் இப்போட்டித் தோ்வு களுக்கு அக்டோபா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. அதில் சோ்ந்து பயிற்சிபெற விரும்புவோா் விண்ணப்ப விவரங்களுடன், வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94873 75737 என்ற மொபைல் எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவிதார்.

    ×