search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA World cup 2018"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உருகுவே அணிக்கெதிரான காலிறுதியில் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #WorldCup2018 #FRAURU
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்ற வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. பிரான்ஸ் - உருகுவே மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.

    தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    பந்து 58 சதவிதம் பிரான்ஸ் அணியிடமே இருந்தது. இருந்தாலும் உருகுவே 7 முறை முயற்சி செய்தது. உருகுவே நான்கு முறை ஆன்டார்கெட் செய்தது. பிரான்ஸ் ஒருமுறைதான் ஆன்டார்கெட் செய்தது.
    பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன லோரிஸ், உருகுவே அணிக்கு எளிதான வாய்ப்புகளை கொடுத்து விடக்கூடாது என்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணிகள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பிரான்ஸ் அணியை விட உருகுவே அணியின் டிபென்ஸ் சற்று கூடுதல் பலத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால், நாங்களும் சிறந்த வகையில் டிபென்ஸ் செய்வோம் என்று பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பரும் ஆன ஹூகோ லோரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரான்ஸ் வீரர்களுக்கு எச்சரிகையும் விடுத்துள்ளார்.



    உருகுவே போட்டி குறித்து லோரிஸ் கூறுகையில் ‘‘உருகுவே அணிக்கு நாங்கள் மலிவான கார்னர் அல்லது ப்ரீ ஹிக் வாய்ப்பை ஏற்படுத்துக் கொடுத்து விடக்கூடாது. முக்கியமாக பெனால்டி பாக்ஸிற்குள் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், உருகுவே அணி வீரர்கள் அபாயகரமானவர்கள்.

    நாங்கள் டிபென்ஸில் சிறப்பாக செயல்பட வேண்டும். இரு அணிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி மட்டுமே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அர்ஜென்டினாவிற்கு எதிராக நாங்கள் விளையாடியது போன்று கடினமான போட்டியாக இது இருக்கும்’’ என்றார்.
    உங்களது டி-சர்ட்டை கொடுப்பீர்களா? என்று கேட்ட ரசிகரை டுவிட்டர் மூலம் கண்டுபிடித்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் பெல்ஜியம் கோல்கீப்பர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்று போட்டி ஒன்றில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் மோதின. முதலில் 2-0 என ஜப்பான் முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல்ஜியம் 3-2 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் லிவர்பூல் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது தனது கையில் ஒரு பதாகை வைத்திருந்தார். அதில் ‘‘மிக்னோலெட், நான் உங்களுடைய டி-சர்ட்டை பெற முடியா?’’ என்று எழுதி வைத்திருந்தார். இந்த பதாகை பெல்ஜியம் அணியின் மாற்று கோல்கீப்பரான சைமன் மிக்னோலெட் மற்றும் பெஞ்சில் அமர்ந்திருந்த ரசிகர்கள் கண்ணிலபட்டது.

    உடனடியாக, மின்னோலெட் அந்த ரசிகருக்கு டி-சர்ட்டை வழங்க முடிவு செய்தார். அவர் யார் என்று தெரியாததால், மின்னோலெட், அந்த ரசிகர் யார் என்பதை கண்டு பிடித்து தர முடியுமா? என்று டுவிட்டரிடம் உதவிக் கேட்டிருந்தார்.

    பின்னர் அந்த ரசிகரை கண்டு பிடித்து விட்டோம். அவர் கிர்கிஸ்தானில் இருந்து ரஷியா வந்துள்ளார். அவருக்கு என்னுடைய டி-சர்ட்டை வழங்கினேன். சமூக வலைத்தளத்தை நான் மிகவம் நேசிக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


    காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று உருகுவே வீரர் சுவாரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்றில் உருகுவே போர்ச்சுக்கல் அணியை 2-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 4-3 என பிரான்ஸ் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    பிரான்ஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் கிலியான் மப்பே. இவர் அடுத்தடுத்து இரண்டு கோல் அடிக்க பிரான்ஸ் 4-2 என முன்னிலைப் பெற்றது. காலிறுதியில் உருகுவே அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்ற கணிக்கப்படுகிறது.



    இந்நிலையில் கிலியான் மப்வேவை கொண்ட பிரான்ஸ் அணியை எதிர்த்து சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக உருகுவே அணியின் முன்னணி வீரரான சுவாரஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உருகுவே நட்சத்திர வீரர் சுவாரஸ் கூறுகையில் ‘‘கிலியான் மப்பே சிறந்த வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவரை கட்டுப்படுத்தும் வகையில் எங்களிடம் சிறந்த டிபென்ஸ் உள்ளது’’ என்றார்.

    இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்அவுட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக்அவுட் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து - கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல்பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. பின்னர் 90 நிமிடங்கள் வரை கொலம்பியாவால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.

    பின்னர் காயம் மற்றும் ஆட்ட நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதலாக ஐந்து 5-நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இதில் 3-வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் மினா தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைப் பெற்றது.



    அதன்பின் ஒவ்வொரு அணிக்கும் தலா 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது. பெனால்டிஷூட் அவுட் என்றாலே இங்கிலாந்துக்கு ஜூரம்தான். ஏனென்றால் 1990, 1998 மற்றும் 2006-ல் பெனால்டி ஷூட்அவுட் தோல்வியடைந்து வெளியேறினார்கள்.

    இந்த முறை பெனால்டி ஷூட்அவுட்டில் இங்கிலாந்து கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று இங்கிலாந்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும், உலக ரசிகர்களும் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என வெற்றி பெற்று அசத்தியது. காலிறுதியில் இங்கிலாந்து சுவீடனை எதிர்கொள்கிறது.
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 57வது நிமிடத்திக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து பயன்படுத்தி கொண்டது.

    அந்த அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் முடிவில் 93வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை தரப்பட்டது.
    இதில் முதல் வாய்ப்பில் கொலம்பியாவும், இங்கிலாந்தும் ஒரு கோல் அடித்தன. இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தன.

    மூன்றாவது வாய்ப்பில் கொலம்பியா அணி ஒரு கோல் அடிக்க 3-2 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

    நான்காவதில் கொலம்பியா வாய்ப்பு தடுக்கப்பட்டது. இங்கிலாந்து ஒரு கோல் அடித்து 3-3 என சமனிலை ஆனது.

    இறுதியாக, கடைசி வாய்ப்பில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி கோல் அடித்து 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    கொலம்பியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #COLENG #ColombiavEngland
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது. இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #COLENG #ColombiavEngland #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், வீரர்கள் அறையை சுத்தமாக வைத்து ‘நன்றி’ என எழுதி வைத்தனர் ஜப்பான் வீரர்கள். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

    முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலைப் பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் ரசித்த ரசிகர்களும் கதறி அழுதார்கள்.



    அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷியாவிற்கு நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.



    மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்துள்ளனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் மைதான கேலரியை சுத்தம் செய்தனர்.
    காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இங்கிலாந்து - கொலம்பியா, சுவீடன் - சுவிட்சர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், உருகுவே, போட்டியை நடத்தும் ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம் ஆகிய 6 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அர்ஜென்டினா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய அணிகள் நாக்அவுட் சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    காலிறுதியில் நுழையும் எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியும். இன்றுடன் 2-வது சுற்று ஆட்டங்கள் முடிகிறது. இரவு 7.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    சுவீடன் அணி ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியிடம் (1-2) தோற்று இருந்தது. சுவிட்சர்லாந்து தோல்வி எதையும் சந்திக்கவில்லை. செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. பிரேசிலுடன் 1-1 என்ற கணக்கிலும், கோஸ்டா ரிகாவுடன் 2-2 என்ற கணக்கிலும் ‘டிரா’ செய்து இருந்தது.

    இரு அணிகளும் உலகக்கோப்பையில் மோத இருப்பது இது முதல் முறையாகும். கடைசியாக மோதிய 3 ஆட்டத்தில் சுவீடன் 1-ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கால்இறுதியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதுகின்றன. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1), அணிகளை வீழ்த்தி இருந்தது. பெல்ஜியத்திடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. அந்த அணியில் கேப்டன் ஹாரி கேன் (5 கோல்), லிங்கார்டு, ஸ்டோன்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.



    கொலம்பியா 3-0 என்ற கணக்கில் போலந்தையும், 1-0 என்ற கணக்கில் செனகலையும் வீழ்த்தி இருந்தது. 1-2 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று இருந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று கால் இறுதியில் நழைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கொலம்பியா சுவிட்சர்லாந்து அணிகளும் கடுமையாக போராடும்.



    நாளையும் (4-ந்தேதி), நாளை மறுநாளும் (5-ந்தேதி) ஓய்வு நாளாகும். 6 மற்றும் 7-ந்தேதிகளில் கால் இறுதி நடக்கிறது. 6-ந்தேதி நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் உருகுவே-பிரான்ஸ் (இரவு 7.30 மணி) பிரேசில்- பெல்ஜியம் (இரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதியில் ரஷியா- குரோஷியா மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மோதுவது யார் என்பது இன்று தெரியும். இன்றைய ஆட்டங்களில் வெல்லும் அணி கால் இறுதியில் மோதும்.
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 - 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் தொடக்கத்தி இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார்.

    மேலும், ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.  

    அதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    பெல்ஜியம் - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் ஆட்டம் முதல் 45 நிமிடத்தில் 0-0 என சமநிலையில் முடிந்துள்ளது. #WorldCup2018 #BELJPN #BelgiumvJapan
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர். ஆனால், எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    இதையடுத்து, முதல் பாதி நேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான் அணிகள் 0-0 என சமனிலை வகித்துள்ளன. #WorldCup #BELJPN #BelgiumvJapan #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA
    ×