search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெனால்டி எல்லைக்குள் உருகுவே வீரர்கள் அபாயகரமானவர்கள்- பிரான்ஸ் கேப்டன் எச்சரிக்கை
    X

    பெனால்டி எல்லைக்குள் உருகுவே வீரர்கள் அபாயகரமானவர்கள்- பிரான்ஸ் கேப்டன் எச்சரிக்கை

    பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன லோரிஸ், உருகுவே அணிக்கு எளிதான வாய்ப்புகளை கொடுத்து விடக்கூடாது என்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணிகள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பிரான்ஸ் அணியை விட உருகுவே அணியின் டிபென்ஸ் சற்று கூடுதல் பலத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால், நாங்களும் சிறந்த வகையில் டிபென்ஸ் செய்வோம் என்று பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பரும் ஆன ஹூகோ லோரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரான்ஸ் வீரர்களுக்கு எச்சரிகையும் விடுத்துள்ளார்.



    உருகுவே போட்டி குறித்து லோரிஸ் கூறுகையில் ‘‘உருகுவே அணிக்கு நாங்கள் மலிவான கார்னர் அல்லது ப்ரீ ஹிக் வாய்ப்பை ஏற்படுத்துக் கொடுத்து விடக்கூடாது. முக்கியமாக பெனால்டி பாக்ஸிற்குள் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், உருகுவே அணி வீரர்கள் அபாயகரமானவர்கள்.

    நாங்கள் டிபென்ஸில் சிறப்பாக செயல்பட வேண்டும். இரு அணிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி மட்டுமே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அர்ஜென்டினாவிற்கு எதிராக நாங்கள் விளையாடியது போன்று கடினமான போட்டியாக இது இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×