search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hugo Lloris"

    குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் லோரிஸ்க்கு 20 மாதம் தடை மற்றும் 50 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Lloris
    பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் ஹியூகோ லோரிஸ். விக்கெட் கீப்பராக இருக்கும் இவரது தலைமையில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இவர் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி அதிகாலை குடித்து விட்டு கார் ஓட்டினார். மத்திய லண்டனில் 2.20 மணிக்கு போலீசார் இவரது காரை நிறுத்தினார்கள். அப்போது குடித்துவிட்டு கார் ஓட்டியது சோதனையில் தெரிய வந்தது. இதனால் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 7 மணி நேரம் காவலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியிடப்பட்டுள்ளார்.



    இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அனுமதிக்கப்பட்டதிற்கு இரண்டு மடங்கு மது அருந்திவிட்டு கார் ஓட்டினார் என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்.

    இருதரப்பு வாதத்திற்கும் பிறகு நீதிபதி, லோரிஸ் கார் ஓட்டுவதற்கு 20 மாதம் தடைவிதித்ததுடன், 50 ஆயிரம் பவுண்டு அபராதமும் வித்தித்தார்.
    குடிபோதையில் காரை ஓட்டிய விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் டோட்டன்ஹாம் கால்பந்து அணி கேப்டன் லோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். #Lloris
    பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் ஹியூகோ லோரிஸ். விக்கெட் கீப்பராக இருக்கும் இவரது தலைமையில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

    இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இன்று அதிகாலை குடித்துவிட்டு கார் ஓட்டியதாக தெரிகிறது. மத்திய லண்டனில் 2.20 மணிக்கு போலீசார் இவரது காரை நிறுத்தினார்கள்.



    அப்போது குடித்துவிட்டு கார் ஓட்டியது சோதனையில் தெரிய வந்தது. இதனால் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 7 மணி நேரம் காவலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியிடப்பட்டுள்ளார்.

    செப்டம்பர் மாதம் 11-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. லோரிஸ் டோட்டன்ஹாம் அணிக்காக கடந்த 2012-ல் இருந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல் கீப்பரும் ஆன லோரிஸ், உருகுவே அணிக்கு எளிதான வாய்ப்புகளை கொடுத்து விடக்கூடாது என்கிறார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணிகள் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. பிரான்ஸ் அணியை விட உருகுவே அணியின் டிபென்ஸ் சற்று கூடுதல் பலத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால், நாங்களும் சிறந்த வகையில் டிபென்ஸ் செய்வோம் என்று பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பரும் ஆன ஹூகோ லோரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரான்ஸ் வீரர்களுக்கு எச்சரிகையும் விடுத்துள்ளார்.



    உருகுவே போட்டி குறித்து லோரிஸ் கூறுகையில் ‘‘உருகுவே அணிக்கு நாங்கள் மலிவான கார்னர் அல்லது ப்ரீ ஹிக் வாய்ப்பை ஏற்படுத்துக் கொடுத்து விடக்கூடாது. முக்கியமாக பெனால்டி பாக்ஸிற்குள் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால், உருகுவே அணி வீரர்கள் அபாயகரமானவர்கள்.

    நாங்கள் டிபென்ஸில் சிறப்பாக செயல்பட வேண்டும். இரு அணிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி மட்டுமே இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அர்ஜென்டினாவிற்கு எதிராக நாங்கள் விளையாடியது போன்று கடினமான போட்டியாக இது இருக்கும்’’ என்றார்.
    ×