search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face mask"

    • பி.எப்., 7 உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
    • முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தேவையான பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக அரசும் துவக்கியுள்ளது.

    திருப்பூர் :

    வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என பின்னலாடை நகரான திருப்பூரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். வெளிநாட்டினரும் அடிக்கடி வரும் நகரம்.தொழில் நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பலர் பயணமாகி விட்டு திரும்ப வருவது வழக்கமாக உள்ளது. கடந்த கொரோனா அலைகளின் போது வேகமாக பரவும் மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூர் இடம் பெற்றிருந்தது.அதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்கள் தொகை. மாவட்டத்தில் 26 லட்சம் மக்களும், மாநகரில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரும் வசிக்கின்றனர்.

    மக்கள் நெருக்கடியும், நெரிசலும் தவிர்க்க முடியாததாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் பி.எப்., 7 உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தேவையான பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழக அரசும் துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

    திருப்பூர் கொரோனாவையும் வென்று காட்ட வேண்டுமெனில் நாம் அனைவரும் இப்போதிருந்தே முக கவசம் அணியும் பழக்கத்தை மீண்டும் துவங்க வேண்டும். ஒவ்வொருவர் பாதுகாப்பையும் அவரவர் உறுதி செய்து கொள்ள முககவசம் அணிந்து விட்டால் வரும் நாட்களில் பயமின்றி வாழலாம். தற்போதைய நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை. கண்காணிப்பில் இருப்பவர்களுக்கும் இல்லை என மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
    • டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்பப்பெற முடிவு எடுத்துள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வந்த நிலையில், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. அதை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்க வகைசெய்து உத்தரவிடப்பட்டது.

    தற்போது அங்கு தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடி, பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்பப்பெற முடிவு எடுத்துள்ளது. எனவே இனி அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

    ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

    • தொண்டி அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வட்டாணம் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தேன்மொழி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு பூமிநாதன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாஹினி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய்கள் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தலா 10 முகக்கவசம், 200 மில்லி சானிட்டைசர் இலவசமாக வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது.
    • மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் சித்தர்குரு சித்தா மருந்தகம் மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதனை மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிஸியம்மாள் பெற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல்,சித்தர் குரு மருந்தக உரிமையாளர் முகமது ஹாசிம், தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமதுஇத்ரீஸ் , மாவட்ட பிரதிநிதி சகாபுதீன்,தி.மு.க. கட்சியின் மங்கலம் ஊராட்சி 3-வது வார்டு செயலாளர் முஜிபுர்ரகுமான், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது உசேன்,மங்கலம் சரவணக்குமார், மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதுபோன்ற இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
    • தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையொட்டி பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற வேண்டும். கதவுகள் மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், பள்ளி-கல்லூரி உள்பட கல்வி நிலையங்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வருகை தருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சளி-காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நகரங்களை பொறுத்த வரையில் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கணக்கின் படி குடிசைப்பகுதிகளில் 40 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 48 சதவீதம் பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    கொரோனா கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி தொடர்ந்து இருந்து வருகிறது.

    நாட்டில் தற்போது நோய் தொற்று குறைந்து இருந்தாலும் கட்டுப்பாடுகளை முற்றிலும் விலக்கவில்லை. எனவே முகக்கவசம் தொடர்ந்துஅணிய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் பலர் இப்போது முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். கொரோனா பயம் இல்லாததால் முகக்கவசத்தை தூக்கி எறிந்து விட்டு சாதாரணமாக நடமாடுகிறார்கள்.

    இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்பவர்கள் போலீசார் பிடிப்பார்கள் என்பதால் மட்டுமே முகக்கவசம் அணிகிறார்கள். மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பஸ்கள், ரெயில்களில் பொதுமக்களில் பலர் முகக்கவசம் இல்லாமலே காணப்படுகிறார்கள்.

    அப்படி முகக்கவசம் அணிந்திருந்தாலும் அது முழுமையாக மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைப்பது போல் அணிவதில்லை. பெரும்பாலானோர் கழுத்தில் தொங்கப்போட்டு செல்கிறார்கள்.

    இதற்கு முன்பு முகக்கவசம் அணியாதவர்களை பலர் கடைகளில் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்போது கடைக்காரர்கள் கண்டு கொள்வதில்லை. சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி இதையெல்லாம் கண்காணித்து வந்தனர். ஆனால் இப்போது இந்த கண்காணிப்பு முடங்கி விட்டதால் மக்கள் மிகவும் அலட்சியமாக காணப்படுகிறார்கள்.

    சென்னையை பொறுத்த வரையில் வடசென்னை பகுதியில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலேயே இருக்கிறார்கள். அந்த பகுதியில் நெருக்கடியான கடைவீதிகள் இருக்கின்றன. கூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

    முகக்கவசம் அணியாமல் செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும் போது, “கொரோனா பணிகளை தீவிரமாக கவனித்து வந்த நிலையில் தற்போது வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனவே அதில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம். எங்களது குழுக்கள் தற்போது வெள்ளப்பகுதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் கொரேனா விவகாரங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

    மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்கள் அதிகரிப்பு

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தொற்றுநோய் தடுப்பு துணை இயக்குனர் பிரபா தீப் கவுர் கூறும்போது, “தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி மக்களிடம் முகக்கவசம் அணிந்திருப்பது குறைந்திருக்கிறது. வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது கண்டிப்பாக நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

    யார் தடுப்பூசி போட்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியாது. எனவே முகக்கவசம் அணிந்தால் தான் நம்மை காப்பாற்றி கொள்ள முடியும் குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கூறினார்.

    பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, “ தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேல் உள்ள தடுப்பூசி போடாதவர்கள், ஒரு ஊசி மட்டும் போட்டவர்கள் மத்தியில் நோய் பரவி உயிரிழப்பது அதிகமாக இருக்கிறது. அதேபோல இணை நோய் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதால் பல்வேறு சுவாச நோய்களை தடுக்க முடியும்” என்று கூறினார்.

    மற்றொரு சுகாதார அதிகாரி கூறும்போது, “முகக்கவசம் அணிவது குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இதை கட்டாயமாக அணிவதுடன் கொரோனா பாதுகாப்பு முறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்வது அவசியமாகிறது” என்று கூறினார்.

    நகரங்களை பொறுத்த வரையில் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த கணக்கின் படி குடிசைப்பகுதிகளில் 40 சதவீதம் பேரும், நகரப் பகுதிகளில் 48 சதவீதம் பேரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தெரிய வந்துள்ளது.

    இதையும் படியுங்கள்...காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு 21-ந்தேதி வரை விடுமுறை

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க, முக கவசம் அணிந்து இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போதுமானது அல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது.
    கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பது ஒருபுறமிருக்க தடுப்பூசி போட்டிருக்கும் தைரியத்தில் பலர் முக கவசத்தை முறையாக அணியாத நிலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி மழைக்கால நோய்த்தொற்றுகளை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க, முக கவசம் அணிந்து இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போதுமானது அல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது.

    இதுதொடர்பான ஆய்வை கியூபெக், இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருகிறார்கள். இறுதியில் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்கள், உள் அரங்குகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவதன் மூலம் காற்றை மாசுபடுத்தும் துகள்களின் வரம்பை சுமார் 67 சதவீதம் குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

    பொதுவாக, ஒரே குடும்பத்தை சாராதவர்களுடன் பொதுவெளியில் நடமாடும்போது இரண்டு மீட்டர் தூரம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவுவதை தடுக்க இந்த தூரம் மட்டும் போதாது என்பதை ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.

    ஆய்வின்படி, மக்கள் முக கவசம் அணியாதபோது ​​70 சதவீதத்திற்கும் அதிகமான வான்வழி துகள்கள் 30 விநாடிகளில் இரண்டு மீட்டர் தூரத்தை கடந்து செல்கின்றன. அதேவேளையில் முக கவசம் அணிந்தால் ஒரு சதவீதத்துக்கும் குறைவான துகள்களே இரண்டு மீட்டர் தூரத்தை கடக்கின்றன.

    ஆகையால் முக கவசம் அணிந்திருக்கும் பட்சத்தில் வான்வழி துகள்களில் கலந்திருக்கும் மாசுக்கள் அதன் வழியே வடிகட்டப்பட்டு விடும். அதனை நுகர்வும் அளவும் குறைந்துவிடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

    கொரோனா உள்ளிட்டநோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிவதும், நல்ல காற்றோட்டமான சூழலும் முக்கியமானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். அவகேடோவில் பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கோடைக்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

    சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

    முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
    இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.
    பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. இங்கே பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்யக்கூடிய எளிமையான ஃபேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறோம். சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.

    1. பாதாம் மற்றும் பால் கலந்த ஃபேஸ் மாஸ்க்

    1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
    2 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

    ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவி விட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த ஃபேஸ்பேக்கை போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம்.

    2. பாதாம், பால் மற்றும் அரைத்த ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள்ஸ்பூன் பாதாம்
    1 டேபிள்ஸ்பூன் அரைத்த ஓட்ஸ்
    3 டேபிள்ஸ்பூன் காய்ச்சாத பால்

    ஒருபவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். தூங்குப் போவதற்கு முன் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடலாம். ரோஜா தண்ணீரை பஞ்சினால் தொட்டு முகம் முழுவதும் துடைத்துவிட்டு. இந்த மாஸ்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் கழித்தோ அல்லது முழு இரவு வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம். பின் நைட் கிரீம்மை பயன்படுத்தவும்.

    3. பாதாம், மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்

    1 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடர்
    2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
    1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்

    ஒரு பவுலில் மேலே சொன்ன பொருட்களையெல்லாம் கலந்து ரோஸ் வாட்டர் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்துப் பின் முகம் கழுவவும். 
    பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
    கோடைக்காலத்தை காட்டிலும் குளிர்காலம் நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் இருக்கும். முகம், கை கால்கள், ஸ்கால்ப் ஆகியவற்றில் இருக்கக்கூடிய சருமத்தை வறண்டு போக செய்யும். சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பராமரிக்கலாம்.

    பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் அவகாடோவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

    முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    ×