search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extortion of money"

    • 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர்.
    • வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கோபி என்ற யூசுப் (வயது 33). வியாபாரி. சம்பவத்தன்று இவர் செந்தமிழ் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் கோபியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே பாக்கெட்டில் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கோபி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரியிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • விஜயா கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணாநகரைச் சேர்ந்த சேதுராமன் மனைவி விஜயா(வயது 53). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அருகே வந்த வாலிபர் விஜயா வைத்திருந்த சுருக்குப்பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விஜயா திருடன், திருடன், என சத்தம் போட அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆயிரம்ரூபாய் பணத்துடன் இருந்த சுருக்குப் பையை விஜயாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்தபோது அவர் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த திருமலைசாமி மகன் சுரேஷ்குமார்,24, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 பேர் கொண்ட திருநங்கை கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் காந்தி ரோடு ஆற்காடு ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜ்களில் தங்கி உள்ளனர்.

    தினந்தோறும் விடுதிகளில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவர்களை மடக்கி திருநங்கைகள் சிலர் பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துளசிதாஸ் அவருடைய பேத்தி பாயில்தாஸ் (வயது 21) ஆகியோர் இன்று காலை காந்தி ரோட்டில் பொருட்கள் வாங்க நடந்து சென்றனர்.

    அவர்களை 5 பேர் கொண்ட திருநங்கைகள் வழிமடக்கி எலுமிச்சம் பழம் கொண்டு திருஷ்டி கழிப்பதாக தெரிவித்துள்ளனர். அவருடைய கைப்பை, மணிபர்ஸ் போன்றவற்றை தடவி உள்ளனர்.

    அப்போது பாயில்தாஸ் வைத்திருந்த ரூ.1,000-தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாயில்தாஸ் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் காந்தி ரோடு பகுதியில் பணம் பறிக்கும் கும்பலை தேடி வருகின்றனர்.

    • 4 பேர் அஷிக்குள் அல் இஸ்லாமிடம் செல்போன் கொடுக்கும்படி கேட்டனர்.
    • 4 பேரும் ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஷிக்குள் அல் இஸ்லாம் (வயது 20). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனிஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.

    பெரியக்கடை வீதி லங்கா கார்னர் பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அஷிக்குள் அல் இஸ்லாமிடம் செல்போன் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து அஷிக்குள் அல் இஸ்லாமை தாக்கினர். பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • ந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரி செயல்பட்டு வருகிறது.
    • 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    கோவை

    கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன் நகரை சேர்ந்தவர் ரவி (48).

    இவர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் வழக்கம்போல ரவி பேக்கரியில் வேலையை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது பேக்கரிக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பேக்கரி கேசியர் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

    அவர் கொடுக்க மறுத்து வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரவியிடம் இருந்து ரூ.2,400 பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

    இது குறித்து ரவி காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கத்தி முனையில் பறித்த நபர்கள் குறித்து விசாரித்தனர்.

    இதில், பணம் பறித்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்திபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன்ராஜ்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு வாலிபர் பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வானூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் எரையானூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வினோத்குமார் தனது வீட்டுக்கு விரைந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரி த்து வருகிறார்கள்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 52 ) . இவர் சிட்டிங் பஜார் பகுதியில் நடந்து சென்று கொண் டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமேஷின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார் . இதுகுறித்து ரமேஷ் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய் தார் .

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது சலவன் பேட்டையை சேர்ந்த ரகுநாதன் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பீர்பாட்டிலால் தாக்கி துணிகரம்
    • 2 பேர் கைது

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29) கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர் மோகன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காட்பாடி செங்குட்டையிலிருந்து பள்ளி குப்பத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செங்கோட்டை பகுதியை ஒட்டி உள்ள மைதானம் அருகே சென்ற போது 3 பேர் அவர்களை மடக்கினர்.

    அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நந்தகுமாரிடம் பணம் கேட்டனர். அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். அவரது செல்போனை பிடுங்கினர். அதனை பரிசோதித்த கும்பல் செல்போனில் ஜிபே உபயோக படுத்துவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த செல்போனில் இருந்து நந்தகுமாரை மிரட்டி ரூ.2 ஆயிரத்தை அவர்களது ஜிபே எண்ணுக்கு மாற்ற செய்தனர்.

    அவர்களது அக்கவுண்டுக்கு பணம் வந்த பிறகும் நந்தகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நந்தகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.2000 பரிமாற்றம் செய்யப்பட்ட செல்போன் ஜிபே எண் மூலம் துப்புத் துலக்கினர்.

    இதில் அந்த எண் செங்குட்டையை சேர்ந்த பிரவீன் (28) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் பிரவீனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் பிரவீன் அவரது நண்பர் கவுதம் (26) மற்றும் ஜேக்கப் ஆகியோருடன் சேர்ந்து நந்தகுமாரை தாக்கி ஜிபே மூலம் பணம் பறித்தது தெரியவந்தது.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் கவுதமை கைது செய்தனர். ஜேக்கப்பை தேடி வருகின்றனர்.

    தொழிலாளியை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீஸ் எனக்கூறி மோசடி
    • டிரைவர் கைது

    ஆரணி:

    ஆரணி அடுத்த அடையபுலம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவர் வெட்டியான் தொழுவம் காப்பு காட்டில் சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த பையூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், என்பவர் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி விஸ்வநாதனை மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்து சென்றார்.

    பின்னர் இது குறித்து விஸ்வநாதன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    • கத்தியை காட்டி மிரட்டினார்
    • போலீசார் விசாரணை


    Ranipettai News Youth arrested for extorting money from worker







    அரக்கோணம்:

    நெமிலி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வெளியூர் செல்வதற்காக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு நின்று இருந்த வாலிபர் ஒருவர் பாலாஜியை கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் பொருட்களை பறித்து சென்றார்.

    இதுகுறித்து வாலாஜா அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பணம் பறித்துச் சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கண்ணன் (36)என்பதும் இவர் பாலாஜியை மிரட்டி பணம் பறித்தவர் என்பதும் தெரிந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய பட்டிருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கை-கால் வலிப்பு வந்தது போல் நடித்தார்
    • 3 பேர் திடீரென சுற்றி வளையத்தனர்

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.அவர் அன்னூர்- மேட்டுப்பாளையம் ரோடு ஜெ.ஜெ.நகர் அருகே சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் சாலையில் கை-கால் வலிப்பு வந்தது போல் துடித்து கொண்டு இருந்தார். அவர் உடனே மினி வேனை நிறுத்தி தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு அந்த வாலிபரின் அருகே சென்றார்.அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேர் திடீரென மாரிமுத்தை சுற்றி வளையத்தனர். அவர்களுடன் கை-கால் வலிப்பு வந்தது போல் நடித்த வாலிபரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கட்டி மிரட்டினர்.பின்னர் அவரிடம் இருந்த ரூ.6800 மற்றும் வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர். 

    • கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் நிறுவனத்தில் தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். பஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.

    கோவை:

    கடலூர் அருகே உள்ள காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவர் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார்.

    இதனையடுத்து அவர் தனது கம்பெனியில் இருந்து சம்பள பணம் ரூ. 1 லட்சத்தை பெற்றார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். பஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது அங்கு மது குடித்துக்கொண்டு இருந்த 2 பேர் ராஜசேகரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அவருக்கு உதவி செய்வது போல நடித்து பேசினர்.

    பின்னர் அவரை திருச்சி ரோட்டில் உள்ள பள்ளி அருகே மறைவான இடத்துக்கு அைழத்து சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் ராஜசேகரின் தலையில் தாக்கினர். இதில் நிலைதடுமாறிய அவர் மயங்கினார். பின்னர் 2 பேரும் அவர் வைத்து இருந்த ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து சிங்காநல்லூர் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து தொழிலாளியை தாக்கிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    ×