search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "escape"

    • 2 பேரை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கோவை,

    கோவை கணபதி லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி அம்பிகா (வயது 42).

    இவர் கோவை ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் லட்சுமி புரம் பகுதியில் உள்ள

    காப்பகத்தில் காவலாளி யாக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று காப்பகத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தேன்.

    அப்போது காப்பகத்தில் இருந்த மதுரையை சேர்ந்த 19 வயது பெண், காரமடையை சேர்ந்த 22 வயது பெண், தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தையுடன் இருந்து வரும் திருப்பூரை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் சேர்ந்து நான் தூங்கி கொண்டு இருந்த போது எனது தலையணையின் அடியில் இருந்த காப்பகத்தின் சாவியை எடுத்து மாயமாகி விட்டனர்.

    அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே அவர்களை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 பெண்களையும் குழந்தையும் தேடி வந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த 37 வயது பெண் உள்பட 2 பெண்கள் அவர்களது வீட்டு சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மற்ற 2 பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 இளம் பெண்களும் எதற்காக காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினையா என 2 பேரை மீட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
    • எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என விசாரணை.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதியில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரியை மறிக்க முயன்றனர். ஆனால் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து மினி லாரியை சோதனை யிட்டனர். அதில் 2Ñ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார் ? எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுவர் ஏறி குதித்து ஓட்டம்
    • வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).

    இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் (வயது 23), இவரது தம்பி ரட்சக நாதன் (19), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (19) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய எறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பெர்ணான்டஸ், காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கற்களை வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
    • மேலஒட்டங்காடு என்ற இடத்தில் மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு போக்கு வரத்து கழக பணிமனை யில் இருந்து (தடம் எண் 1) அதிராம்பட்டினம் சென்று விட்டு மீண்டும் பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    மரக்காவலசை அருகே நேற்று மாலை வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    தொடர்ந்து சேதுபாவா சத்திரம் வழியாக இரண்டா ம்புளிக் காடு சென்றவர்கள் பேராவூரணி பணிமனையைச் சேர்ந்த (தடம் எண் 10) பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து அழகியநாயகிபுரம் வழியாக ஒட்டங்காடு சென்று, மேலஒட்டங்காடு என்ற இடத்தில் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக நகர பேருந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த (தடம் எண் 6 ஏ) பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மதுரையில் பாலியல் கைதி தப்பி ஓடினார். அவரை ராமநாதபுரம் போலீசார் 2 தனி படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
    • பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்” என்றார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு உள்ளது. அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பத்மேசுவரன், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோரிப்பாளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியது தெரியவந்தது.

    மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பத்மேசுவரன் ஜெயிலில் இருந்து தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியபத்மேசுவரனை பிடிக்கும் பணியில் மதுரை மாநகர போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், குற்றப்புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்" என்றார்.

    • அதே பகுதியில் உள்ள பெண் ஒருவர் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் அடுத்து கடகம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்அதே பகுதியில் உள்ள 30 வயதுடைய பெண் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார் அப்போது ரமேஷ்குமார் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார்.

    அப்போது அலறியடித்த வெளியே அவர் ஓடி வந்துவிட்டார். சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தங்க பொட்டு தாலியை அறுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடியுள்ளார்.
    • அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி செல்வதர்க்குள் அவர் தப்பி சென்று விட்டார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் - திருச்சி சாலையில் ஆலமரம் அருகே உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரகாரத்தின் வெளியே பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த. தங்க பொட்டு தாலியை அறுத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடி உள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் தனிப்படை அமைக்க ப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் வல்லம் ஏகவுரியம்மன் கோவில் அருகே அம்மன் தாலியை பறித்து சென்ற கரூரை சேர்ந்த செல்லதுரை (வயது 28) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்‌ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 25). கூலி ெதாழிலாளி.

    இவர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மனைவி தீபிகா ஏற்கனவே திருமணமாகி சில மாதங்களில் கணவரை பிரிந்தார். பின்னர் அவர் தனியாக வசித்து வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

    அது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு சுபிக்‌ஷா (2) மற்றும் 8 மாதத்தில் சுஜி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் வழக்கம் போல அறையில் தூங்க சென்றோம். காலை எழுந்து பார்த்த போது எனது மனைவி தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த நான் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. எனது மனைவி வீரகேரளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.

    அதை நான் கண்டித்தேன். இதனால் எனது மனைவி அந்த வாலிபருடன் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகளை கண்டு பிடித்து தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தீபிகா மற்றும் 8 மாத குழந்தை சுஜியை தேடி வருகின்றனர்.  

    • விழுப்புரத்தில் பரபரப்பு வீடு புகுந்து மாணவனை கடத்தி ரூ. 10 லட்சம்கேட்டு மிரட்டல் 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    • விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சூர்யகுமார் (வயது 19). இவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று வீட்டில் இருந்தபோது திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் விழுப்புரம் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் சூர்யகுமாரை நைசா பேசி அழைத்து சென்றனர்.

    அப்போது 5 பேர் கும்பல் சூர்யகுமார் தாயாரிடம் செல்ேபானில் தொடர்பு கொண்டு உங்கள் மகனை கடத்தி வந்து உள்ளோம். அவனை விடுவிக்க வேண்டும்என்றால் ரூ. 10 லட்சம் தரவேண்டும். அதனை மீறி போலீசில் தெரிவித்தால் உனது மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு துண்டித்து விட்டனர்.பதறி போன கிருஷ்ணவேணி இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சூர்யகுமாரை திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த நந்தா, மாரி உள்ளிட்ட 5 பேர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.அவர்கள் பேசிய செல்ேபான் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த 5 பேரும் விழுப்புரம் அருகே வீரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே ேபாலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த 5 பேரும் அங்கிருந்து சூர்யாகுமாருடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/   

    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கண்ணன். இவரது மனைவி மனைவி சரண்யா.

    இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யா வின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி யடைந்த சரண்யா செயினை பிடித்து கொண்டார்.

    இருந்தாலும் மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×