search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் கைதி தப்பி ஓட்டம்: ராமநாதபுரத்தில் 2 தனி படைகள் அமைப்பு
    X

    பாலியல் கைதி தப்பி ஓட்டம்: ராமநாதபுரத்தில் 2 தனி படைகள் அமைப்பு

    • மதுரையில் பாலியல் கைதி தப்பி ஓடினார். அவரை ராமநாதபுரம் போலீசார் 2 தனி படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
    • பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்” என்றார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வேப்பங்குளத்தை சேர்ந்த முத்துமாரியப்பன் மகன் பத்மேசுவரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் மாதம் மூக்கையூர் கடற்கரையில் காதலனுடன் வந்த 21 வயது பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு உள்ளது. அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பத்மேசுவரன், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

    தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக, தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    பத்மேசுவரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோரிப்பாளையம் வரை ஆட்டோவில் சென்ற பத்மேசுவரன், அங்கிருந்து நண்பர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியது தெரியவந்தது.

    மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம் பகுதிகளில் பத்மேசுவரனுக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளில் பத்மேசுவரன் பதுங்கி உள்ளாரா? என்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பத்மேசுவரன் ஜெயிலில் இருந்து தப்பியது தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில், "மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியபத்மேசுவரனை பிடிக்கும் பணியில் மதுரை மாநகர போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், குற்றப்புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் பத்மேசுவரனின் உறவினர், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர்" என்றார்.

    Next Story
    ×