என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 3 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அருகே கஞ்சா விற்ற கும்பல் கைது- 2 பேர் தப்பி ஓட்டம்
- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
- 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் (வயது 23), இவரது தம்பி ரட்சக நாதன் (19), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (19) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய எறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பெர்ணான்டஸ், காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.






