லாரியில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என விசாரணை.
கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதியில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரியை மறிக்க முயன்றனர். ஆனால் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து மினி லாரியை சோதனை யிட்டனர். அதில் 2Ñ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார் ? எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com