search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employment"

    • நாளை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்படுகின்றன.

    இதன்படி, நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியானோ ரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலை யளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை அல்லது 3-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.

    மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்தகவலை நாகை மாவட்ட கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.
    • பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் திருமங்கலக்கோட்டை கீழையூர் மேலக்காலணியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுகந்தி (வயது 32) என்பவர் தனது 2 கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் செந்தில்குமார் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலித் தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் இறந்து விட்டதாக எங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் வந்தது.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

    உடனடியாக அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். 2 கைக்குழந்தைகளுடன் நான் எப்படி வாழ்வேன் என்று தெரியவில்லை.

    பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். எனது ஏழ்மை நிலையை உணர்ந்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணவர்களுக்குஎச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பி.எஸ்.சி. கம்யூட்டிங் டிசைனிங், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., சேர்ந்து படித்திட வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எச்சிஎல். நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவருக்கு வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டிங் டிசைனிங் பட்டபடிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் பிசிஏ.,பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் பிசிஏ.,பி.பி.ஏ.,பி.காம். மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைக்கழகத்தில் இன்டிகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டபடிப்பு சேர்ந்து படித்திட வாய்ப்பும் பெற்று தரப்படும்.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பில் 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல்.மூலம்நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000 முதல் ரூ.2,20,000 வரை பெறலாம்.

    மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியையும்,94450 29552 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • வேலையுடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் டெக்னாலஜிஸ்-ல் வேலை வாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி (கம்ப்யூட்டிங் டிசைனிங்) பட்டப்படிப்பு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சாஸ்தரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் இன்டகிரேட்டடு மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும் வாய்ப்பும் பெற்று தரப்படுகிறது.

    விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

    12-ம் வகுப்பை 2022-ம் ஆண்டில் முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்ணும், 2023-ம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

    குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்கவேண்டும்.

    எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    இந்த படிப்பிற்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும்.

    இந்த திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

    எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்ட குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
    • இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 27 -ஆவது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புகார் அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை 93804 14023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ombudsperson.mdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் மத்திய மந்திரி பங்கேற்றார்.
    • ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசுத்துறை மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டன.

    மதுரையில் இது தொடர்பான தொழில் வர்த்தக சங்கத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். மதுரை தபால் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.ஜெயசங்கர், மதுரை மண்டல ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தபால் துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் 200 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றுத் தட்டச்சர், தண்டவள பராமரி ப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் 19-ந் தேதி ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார்துறை சார்பில் ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

    10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மதுரை புதூரில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் போட்டோவுடன் 19-ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்த வகையிலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என ஏஜெண்டுகளுக்கு அறிவுறுத்தினர்.
    மதுரை

    வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னையில்  ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு’’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்  சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று     மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களால் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார். 

    சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவ ர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

    மேலும்  அரசுஅங்கீகாரம்  இல்லாமல் சட்ட விரோத மாக செயல்படும் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரம ப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்து றை   ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செய ல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  

    இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852 , 5610/1337 மற்றும் மின்னஞ்சல் poechennai1@mea.gov.in . poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார் தெரிவித்துள்ளார்.
    வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என ஏஜெண்டுகளுக்கு அறிவுறுத்தினர்.
    மதுரை

    வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னையில்  ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு’’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்  சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று     மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களால் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார். 

    சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவ ர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

    மேலும்  அரசுஅங்கீகாரம்  இல்லாமல் சட்ட விரோத மாக செயல்படும் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரம ப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்து றை   ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செய ல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  

    இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852 , 5610/1337 மற்றும் மின்னஞ்சல் poechennai1@mea.gov.in . poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்     தெரிவித்துள்ளார்.
    விளாத்திகுளத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காய்கறி மார்க்கெட் அருகில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு  மார்க்கண்டேயன்  எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அமைச்சர் கீதாஜீவன் 1 பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார்.

    தேர்தலின் போது கொடுத்த 570 வாக்குறுதிகளில் 270 வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நிறைவேற்றியுள்ளார். தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.


    மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. எல்லா இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ. 3ஆயிரத்து 300 கோடி மதிப்பில் தூர்வரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு  அவர் பேசினார்.

    இதில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மும்மூர்த்தி செல்வராஜ், பேரூராட்சி தலைவர் அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, தலைமை கழகப் பேச்சாளர்கள் சரத்பாலா, ஆரணிமாலா, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சி ஏற்பாடு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக செய்யப்பட்டிருந்தது.
    ×