search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egypt"

    எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.#Egypt #MilitantsKilled
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வன்முறைக் களமாக மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
     
    எதிர்பாரா வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையாட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து ராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆய்தங்க்ள் பறிமுதல் செய்யப்பட்டன என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #Egypt #MilitantsKilled
    பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் எகிப்து பவுண்ட் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக்கின் 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #Egypt
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் அதிபர், பிரதமர் உள்பட பல முக்கிய பதவிகளில் இருந்த ஹோஸ்னி முபாரக் தற்போது வயோதிகம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரின் இரண்டு மகன்களாக அலா, கமால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எகிப்து பங்குச்சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தி சுமார் 494 மில்லியன் பவுண்ட் வரை இருவரும் மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கெய்ரோ :

    எகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற பெரும் திரளான மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு அவர் அதிபர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் ஹஸ்ம்
    எனும் கிளர்ச்சி குழு வேர் விடத்தொடங்கியுள்ளது.

    முந்தய ஆளும் கட்சியான இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியுடன் தொடர்புடைய  ஹஸ்ம் கிளர்ச்சி குழு, எகிப்தின் அரசியல் ஸ்திரத்தனமையை குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது.

    அவ்வப்போது எகிப்து பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் ஹஸ்ம் கிளர்ச்சி குழு தனக்கும் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள கல்யூபியா மாகாணத்தில் எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , கொல்லப்பட்ட 5 பேரும்  ஹஸ்ம் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், கெய்ரோவிற்கு அருகில் உள்ள எல் மார்க் எனும் இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #WorldJuniorSquash #Championship #Egypt
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்தது. 28 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் எகிப்து, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் ஆட்டத்தில் எகிப்தின் மார்வன் டாரெக் 12-10, 11-6, 11-7 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்க் வாலை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் எகிப்தின் ஓமர் எல் டோர்கி 13-11, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் சாம் டோட்டை வீழ்த்தினார். இதையடுத்து 2-0 என்ற கணக்கில் எகிப்து அணி வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இதற்கிடையே, இந்த போட்டிக்காக சென்னைக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்க ஸ்குவாஷ் அணியின் மேலாளரும், பயிற்சியாளருமான கிரஹாம் பிரையர் (வயது 67) நேற்று மரணம் அடைந்தார். விமான நிலையத்திற்கு செல்வதற்காக அணி வீரர்களுடன் பஸ்சில் ஏறுவதற்கு புறப்பட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். #WorldJuniorSquash #Championship #Egypt 
    எகிப்தில் அதிபர் பதவி நீக்கத்துக்கு எதிராக செயல்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்ட்டது.
    கெய்ரோ:

    எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கொல்லப்பட்டனர்.

    எனவே 700 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
    எகிப்து நாட்டில் ஒரே நாளில் இரு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் ஒரு போலீஸ்காரரும், ஒரு பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது.

    கொல்லப்பட்ட இருவரும் உயிரிழப்பதற்கு முன்பாக துப்பாக்கி குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 18 பேரை தாங்கள் புலனாய்வு செய்து கண்டறிந்ததாகவும் போலீசார், கோர்ட்டில் சாட்சியம் கூறினர்.

    விசாரணை முடிவில் அந்த 18 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய எல் ஜகாஜிக் கோர்ட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    இதே போன்று, அங்கு உள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    தண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016-ம் ஆண்டு, சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இவ்விரு வழக்குகளிலும் தண்டிக்கப்பட்டவர்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    எகிப்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 97 சதவிகித வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்ற அப்தேல் அல்சிசி இன்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். #AlSisi #Egypt
    கெய்ரோ:

    எகிப்து அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதிபராக இருந்த அப்தேல் ஃபாட்டா அல்சிசி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர் சிறையில் உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இதனால், அல்சிசியை எதிர்த்து முக்கிய பிரமுகர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    இதனால், 97 சதவிகித வாக்குகள் பெற்று அல்சிசி அபார வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக அல்சிசி இன்று பதவியேற்றார். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் எம்.பி.க்கள் மற்றும் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அல்சிசி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 
    சினாய் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் காசா எல்லைப்பகுதியை ரமலான் மாதம் முழுவதும் திறந்து வைக்க எகிப்து பிரதமர் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.#Gaza #Ramadan
    கெய்ரோ:

    எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த முடிவு எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காசா எல்லைப்பகுதி திறக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் மூடப்பட்டிருக்கும் காசா எல்லை, 1 மாத காலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Gaza #Ramadan
    ×