search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிப்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை
    X

    எகிப்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

    எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 5 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கெய்ரோ :

    எகிப்தில் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியை சேர்ந்த முகமது முர்சியின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற பெரும் திரளான மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த 2013-ம் ஆண்டு அவர் அதிபர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2016-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் ஹஸ்ம்
    எனும் கிளர்ச்சி குழு வேர் விடத்தொடங்கியுள்ளது.

    முந்தய ஆளும் கட்சியான இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சியுடன் தொடர்புடைய  ஹஸ்ம் கிளர்ச்சி குழு, எகிப்தின் அரசியல் ஸ்திரத்தனமையை குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எகிப்து அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சி மறுப்பு தெரிவித்து வருகிறது.

    அவ்வப்போது எகிப்து பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் ஹஸ்ம் கிளர்ச்சி குழு தனக்கும் இஸ்லாமிக் பிரதர்ஹுட் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் உள்ள கல்யூபியா மாகாணத்தில் எகிப்து பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் , கொல்லப்பட்ட 5 பேரும்  ஹஸ்ம் கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், கெய்ரோவிற்கு அருகில் உள்ள எல் மார்க் எனும் இடத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×