search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எகிப்த்"

    எகிப்தின் சினாய் பகுதியில் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். #egyptarmyattack
    கெய்ரோ:

    எகிப்தில் அரசுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடக்கு சினாய் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் இருந்த பகுதியில் ராணுவத்தினர் விமான தாக்குதல் நடத்தினர்.

    இந்த  தாக்குதலில் 2 பயங்கரவாத தலைவர்கள் உயிரிழந்ததாக எகிப்தின் ஆயுதப் படை செய்தித் தொடர்பாளர்  டாமர் அல்-ரெஃபி தெரிவித்தார்.

    ஏற்கனவே கடந்த வாரம் எகிப்தின் ராணுவத்தினர் நாடு முழுவதும் நடத்திய தாக்குதல்களில், 64 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

    எகிப்தில் அதிபர் முகமது மோர்சியின் ஆட்சியை 2013ம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் அகற்றியதையடுத்து பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள் வடக்கு சினாயில் இருந்து தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பிற மாகாணங்களுக்கும் பரவின. காப்டிக் சிறுபான்மையினரை குறிவைத்து, தேவாலய குண்டுவெடிப்பு மற்றும் துப்பக்கிச் சூடு சம்பவங்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #egyptarmyattack
    சினாய் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் காசா எல்லைப்பகுதியை ரமலான் மாதம் முழுவதும் திறந்து வைக்க எகிப்து பிரதமர் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.#Gaza #Ramadan
    கெய்ரோ:

    எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமலான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே இந்த முடிவு எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காசா எல்லைப்பகுதி திறக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் மூடப்பட்டிருக்கும் காசா எல்லை, 1 மாத காலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Gaza #Ramadan
    ×