search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosa"

    • மைதா மாவில் சூப்பராக தோசை செய்யலாம்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருள்கள் :

    மைதா மாவு - 1 கப்,

    பச்சரிசி மாவு - முக்கால் கப்,

    உப்பு - தேவையான அளவு,

    சின்ன வெங்காயம் - 15,

    பச்சை மிளகாய் - 2,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    கடுகு - அரை டீஸ்பூன்,

    சீரகம் - கால் டீஸ்பூன்,

    மிளகு - 10,

    கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,

    எண்ணெய் - (தோசை சுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகை கொரகொரப்பாக உடைத்துக்கொள்ளவும்.

    மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்கு கரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம், மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டவும்.

    அத்துடன் கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.

    சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

    வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது.
    • 5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன.

    சாயல்குடி :

    விலைவாசி பெருமளவு உயர்ந்துள்ள நிலையில் குறைந்தவிலையில் உணவு என்பது சாத்தியமற்றமாக மாறி வருகிறது. இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ. புனவாசல் கிராமத்தில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    இந்த தோசை கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையை ருசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன. யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என்பதில் போட்டி நிலவுகிறது. ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. சிறிய குடும்பத்திற்கு ரூ.25 போதும். காலை உணவை நிறைவு செய்யலாம்.

    இதேபோன்று கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம், ரூ.5-க்கு சற்று பெரிய அளவில் உள்ள தோசைக்கு சாம்பார் மற்றும் தக்காளி, தேங்காய் என 2 வகை சட்னியுடன் விற்கப்படுகிறது.

    மதுரை, சென்னை, திருச்சி கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ.10-க்கும், ஒரு தோசை ரூ.40-க்கும் மேலாக உணவகங்களில் விற்கும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் குறைந்த விலையில் இட்லி,தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கக் கூடும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எங்களுக்கு பெரிய உதவியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடலைமாவில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் அதிகளவு உள்ளது.
    • கடலை மாவில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கடலைமாவு - ஒரு கப்,

    அரிசிமாவு - அரை கப்,

    எலுமிச்சம்பழம் - 1,

    பச்சை மிளகாய் - 2,

    கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறையும் விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக்கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கடலை மாவு தோசை ரெடி.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கப்

    சாக்லேட் சிரப் - 1/4 கப்

    நெய் - 4 ஸ்பூன்

    முந்திரி - தேவையான அளவு

    திராட்சை - தேவையான அளவு

    பாதாம் - தேவையான அளவு

    செர்ரி பழம் - தேவையான அளவு

    வெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.

    அதன் மேல் வெண்ணெயை தடவவும்.

    அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.

    அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.

    இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.

    பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம்.

    எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்

    • கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி.
    • கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 400 கிராம்

    இட்லி அரிசி - 400 கிராம்

    உளுந்தம் பருப்பு - 200 கிராம்

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    காய்ந்த கம்பினை முதலில் அலசி, சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

    கம்பு ஊற வைத்த இரண்டு மணி நேரம் கழித்து, இட்லி அரிசியை கழுவி, கம்புடன் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஊற வைக்கவும்.

    உளுந்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் நன்கு அலசி சுமார் 1மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்னர் கம்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி, கிரைண்டரில் முதலில் அரிசி மற்றும் கம்பினை நைசாக அரைத்து எடுக்கவும.,

    பின்னர் உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை நைசாக தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும்.

    தேவையான உப்பினை, கம்பு மற்றும் அரிசி மாவினை தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் மாவில் சேர்த்து, ஒருசேர அரைத்ததும் தோண்டவும்.

    பின்னர் இரண்டு மாவினையும் ஒருசேரக் கரைத்து, ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லில் புளித்த மாவினை மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

    லேசான பச்சைநிறத்தில் சுவையான கம்பு தோசை தயார்.

    இதற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் உள்ளிட்டவைகள் பொருத்தமாக இருக்கும்.

    • நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/4 கப்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!

    • உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
    • பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - ஒரு கப்,

    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,

    அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 3 ,

    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:

    சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

    வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

    பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

    தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.

    • ஆண்மை அதிகரிக்க புதினாவை உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் சுத்தமடையும்.

    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கப்

    கொத்தமல்லி - 3/4 கப்

    பச்சை மிளகாய் - 5

    புதினா - ஒரு கைப்பிடி

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    இஞ்சி- சிறிய துண்டு

    பூண்டு - 5 பல்

    புளி - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

    * வதக்கியவற்றை ஆறவைத்து சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.

    * சத்தான சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி..

    • மாலையில் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை செய்து தரலாம்.
    • இந்த தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,

    வெல்லம் (பொடித்தது) - 1 கப்,

    பச்சரிசி மாவு - கால் கப்,

    தேங்காய் (துருவியது) - கால் மூடி,

    ஏலக்காய் - 4,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.

    பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.

    வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

    வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.

    • பொடி தோசையில் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்:

    தோசை மாவு - 1 கப்

    இட்லி பொடி - தேவையான அளவு

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி - சிறிது

    எண்ணெய - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, கலந்து வைத்த வெங்காய கலவையை தோசை மேல் தூவி அதன் மேல் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

    பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சூப்பரான வெங்காய பொடி தோசை ரெடி!!!

    • வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
    • இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - 150 கிராம்

    தயிர் - அரை கப்

    உருளைக்கிழங்கு 2

    வெங்காயம் - 2

    பச்சைமிளகாய் - 2

    தக்காளி - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    சோம்பு - தாளிக்க

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

    இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

    அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.

    இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.

    இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.

    • சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
    • இந்த ரெசிபி செய்ய 5 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கப்

    இட்லி பொடி - தேவைக்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.

    பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.

    இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.

    இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.

    ×