search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dosa"

    • தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 200 கிராம்

    கோதுமை - 100 கிராம்

    ராகி - 100 கிராம்

    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    வெந்தயம் - 2 டீஸ்பூன்

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வரகு அரிசி, கேழ்வரகு, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

    எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

    இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நல்லெண்ணெய் விட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான கோதுமை வரகு கேழ்வரகு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • வீட்டில் முட்டை தோசை செய்து இருப்பீங்க.
    • இன்று முட்டை மசாலா தோசை செய்யலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கப்

    முட்டை - 6

    கடுகு - சிறிதளவு

    பெரிய வெங்காயம்  - 2

    தக்காளி  - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய்  - 2

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    மல்லி தூள் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    ½ tbsp மிளகு தூள்  - அரை டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு  - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.

    அதன் பின் இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

    மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து தோசைகளாக ஊற்றி சற்று தடிமனாக ஊற்றவும்.

    பின் அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்ட பின் சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயாராகி விட்டது.

    • மதுரை கறி தோசை மிகவும் பிரபலம்.
    • இந்த தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    கீமா மசாலா செய்ய

    மட்டன் கீமா - கால் கிலோ

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கரி தோசை செய்ய:

    தோசை மாவு

    மட்டன் கீமா மசாலா

    கொத்துமல்லி இலை

    எண்ணெய்

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

    இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்.

    20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.

    அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்.

    மறுபுறம் மசாலா நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
    • உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.

    தேவையான பொருட்கள்

    அரிசி - 1 கப்

    கம்பு - 1 கப்

    கொள்ளு - கால் கப்

    காய்ந்த மிளகாய் - 5

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - சுவைக்கு

    செய்முறை

    அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.

    கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.

    • இது எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
    • சளி, இருமலுக்கு இது நல்ல மருந்தாக செயல்படும்.

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை கீரை - ½ கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - ¼ கப்

    வெந்தயம் - ½ டீஸ்பூன்

    இஞ்சி - 1 துண்டு

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும்.

    இப்போது தூதுவளை தோசை மாவு தயார்.

    புளித்த பின் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம்.

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உகந்தது.
    • சர்க்கரை நோயாளிகள் கோதுமை உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்

    வெங்காயம் - 3

    பச்சை மிளகாய் - 5

    சீரகம் - ஒரு டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, புதினா சட்னி அருமையாக இருக்கும்.

    • ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1 கப்,

    தயிர் - அரை கப்,

    பிரெட் - 5,

    வெங்காயம் - 2,

    பச்சைமிளகாய் - 5,

    கொத்தமல்லி - சிறிது,

    எண்ணெய், உப்பு, சீரகம் - தேவையான அளவு.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடித்து போடவும்.

    அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம்.

    இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    • இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
    • இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கரண்டி

    ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு

    குடைமிளகாய் - சிறியது 1

    வெண்ணெய் - தேவையான அளவு

    மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி

    சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

    புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி

    செய்முறை

    குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.

    அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.

    அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.

    கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.

    சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.

    • வித்தியாசமான சுவையான இந்த தோசை அனைவருக்கும் பிடிக்கும்.
    • இதற்கு தொட்டுக்கொள்ள சைடிஷ் தேவையில்லை.

    தேவையான பொருட்கள்

    தோசை மாவு - 1 கப்

    இட்லி பொடி - தேவைக்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.

    பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.

    இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.

    இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.

    • குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் - 1

    கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை

    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    கொத்தமல்லி - சிறிதளவு

    முட்டை - 1

    தோசை மாவு - 1 கப்

    செய்முறை:

    சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைக்கவும்.

    சின்ன வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான சிக்கன் தோசை தயார்.

    • துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
    • துவரம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - 1 கப்,

    துவரம்பருப்பு - அரை கப்,

    உப்பு - தேவையான அளவு,

    காய்ந்த மிளகாய் - 6,

    தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    அரிசி, பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து உப்பு, காய்ந்த சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான துவரம் பருப்பு தோசை ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள குருமா சுவை கொடுக்கும்.

    • ஜவ்வரியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ஜவ்வரிசியில் தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - ஒன்றரை கப்,

    ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 4,

    கடுகு - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

    முதலில் அரிசியை ஆட்டவும்.

    பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி தோசை ரெடி.

    ×