search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstrated"

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாகை புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விரைவுபோக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிமணி கலந்துகொண்டு பேசினார்.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும்.சம வேலைக்கு சம ஊதியமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கவேண்டும். ஊழியர்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்குரிய ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். எடை குறைவு இல்லாமல் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
    கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் பேசுகையில், “எங்களுடைய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாக முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். #tamilnews
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்ய வேண்டும். கல்வித்துறையை குழப்பத்தில் ஆக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும்.

    அரசு பொதுத்தேர்வு சுமையை கருத்தில் கொண்டு முதுநிலை ஆசிரியர்களை 11,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் சார்பில், நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் பேசினார். இதில் தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி-தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட தலைவர் தேவேந்திரன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்தி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலசந்தர் ஆகியோர் 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ அமைப்பின் இணைப்பு சங்கங்களில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வலியுறுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக்குழுவினை கலைத்திட வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், புகழேந்தி, யோகராசு, இளங்குமரன், சரவணன், நெடுஞ்செழியன், மகளிர் அணி துணை அமைப்பாளர்இளவேனில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி பணியாளர் சீரமைப்புக்குழுவின் செயல்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி உள்பட 7 தாலுகா அலுவலகங்கள் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஆணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீர்த்திருத்த குழுவை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் காமராஜ், பெருமாள், வருவாய் ஊழியர் சங்கம் சலிம்பாஷா, ஊரக வளர்ச்சித்துறை கோபாலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மணி நன்றி கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர், சூளகிரி, ஊத்தங்கரை தாலுகா அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை, சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
    ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும், தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிவகங்கையில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் கணேசன் பேசும்போது, மாவட்ட கூட்டுறவு துறை சமீபகாலமாக மத்திய வங்கி பணியாளர்கள் மீது வேண்டுமென்றே வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அந்தந்த சங்கமே பொறுப்பாகும். இதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கள ஆய்வாளர்களும் நேரடி பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் வீண் பழி சுமத்துவதற்காக மத்திய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    ஆர்ப்பாட்ட முடிவில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. 
    வேல்முருகன் கைதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பிராட்வே:

    சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழர் பேரவை சார்பில் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்து தீக்குளித்து இறந்த ஜெகன்சிங் உருவ படத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    தமிழகத்தின் நலன் காக்க அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசு அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்ற தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. இதற்கு துணையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவை வைத்து தான் தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், அவுரித்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் குமார், ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

    வருவாய்த்துறையை அதன் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு சிறப்புத்துறையாக அறிவித்து தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி நிமித்தமாக சென்னை செல்லும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தங்க வசதியாக விடுதி வளாகம் ஏற்படுத்தி தரவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை செல்போனுக்கு இன்டர்நெட் வசதியுடன் மாதாந்திரக் கட்டண தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    கள ஆய்வுப்பணிக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவிற்கு என பிரத்யேகமாக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிப்பது. பதிவறை எழுத்தர்களுக்கு ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட தர ஊதியத்தை வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×