search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trade unions"

    • வாஞ்சி மணியாச்சியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
    • டிக்கெட் எடுக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீள விட்டான் ரெயில் நிலையத்துக்கு வருகை தந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்.கிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் தமிழரசு மற்றும் உறுப்பினர்கள் ஜெயந்த் தாமஸ், ரமேஷ் ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தொடுதுறை சிஸ்டம் மீண்டும் அமைக்க வேண்டும்.

    தூத்துக்குடியில் இருந்து தொழிலதிபர்கள், வியாபாரிகள், வட மாநிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சாதாரண ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்டர்கள் இயங்கி வந்தனர்.

    தற்போது ஒரு கவுண்டர் தான் இயங்கி வருகிறது. இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மூடப்பட்ட 2-வது டிக்கெட் கவுண்டரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளுக்கு சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http://www.labour.tn.gov.in என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமரசம்) அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார். 

    • புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.
    • புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.

    இதனால் அங்கு பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    2 ஆண்டுக்கு மேல் இருப்பு உள்ள நூலை விற்று சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் நூதனமாக பஞ்சு தின்னும் போராட்டம் நடத்தினர்.

    இதில் ஐ.என்.டி.யூ,சி,

    பி.எம்.சி. சிவசங்கரன், எல்லப்பன், நூற்பாலை தொழிலாளர் சங்கம் சிவகடாட்சம், மாதவன், பாட்டாளி

    தொ–ழிற்சங்கம் ராஜாராம், ரமேஷ், ஐ.என்.டி.யூ,சி,

    தேசிங்கு, விசுவாசு,

    எல்.எல்.எப். நடராஜன், சாமிக்கண்ணு, எஸ்.எல்.யூ. முருகன், முத்து, ஏ.டி.யூ. ரவிச்சந்திரன், பழனிராஜா, என்.ஆர்.டி.யூ.சி. சுதாகர், சிவசுப்பிரமணியன், பி.எம்.எஸ்.கே. இளங்கோவன், துரைலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு–பட்டவர்கள் பஞ்சை தின்னுவது போல போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து கோஷம் எழுப்பினர்.

    • பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    உடுமலை:

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சங்க நிர்வாகிகள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர்பாலநாக மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் குமரன் வரவேற்று பேசினார். பொருளாளர் மெஞ்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தின் போது 40 விவசாய பொருள்களுக்கு ஒரு சதவீத செஸ்வரி ,அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி முதலியவற்றை ரத்து செய்ய கோரி வரும் 22ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டம் மற்றும் உடுமலை கிளை பகுதிகளில் இருந்து 2000 வியாபாரிகள் சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் உடுமலை நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மதுரை

    மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று டி.ஆர்.இ.யூ.-சி.ஐ.டி.யூ. ரெயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணைப்பொதுச் செயலாளர் கார்த்தி சங்கிலி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவக்குமார், லெனின், கண்ணன், சங்கர நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். துணைத்தலைவர் வினோத்பாபு நன்றி கூறினார்.

    ரெயில்வேயில் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒட்டன்சத்திரத்தில் கேட் கீப்பரை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக்கோரி ஊட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ஹால்துரை, மாவட்ட பொருளாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் எட்வின் கூறியதாவது:-

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நடத்தி வரும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம், மொத்த விற்பனை பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், தாலுகா கூட்டுறவு விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பிற கூட்டுறவு சங்கங்களால் நியாய விலைக்கடைகள் நடத்தப்படுகின்றன. பொது வினியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வந்து அரசின் கீழ் செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து கூட்டுறவு நியாய விலைக்கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வேண்டும். வினியோகத்தின் போது ஏற்படும் சிந்துதல், சிதறுதல்களுக்கு சேதார கழிவு 3 சதவீதம் வழங்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், சிறப்பு பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் எடை குறையாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012-2013-ம் ஆண்டு முதல் 2017-2018-ம் ஆண்டு வரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானிய தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்துவதுடன், பணியாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடைகளில் எடையாளர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    ×