search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ரெயில்வே பொதுமேலாளரிடம் வர்த்தக தொழிற்சங்கத்தினர் மனு
    X

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்.கிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் மனு அளித்த போது எடுத்தபடம்.


    தூத்துக்குடியில் ரெயில்வே பொதுமேலாளரிடம் வர்த்தக தொழிற்சங்கத்தினர் மனு

    • வாஞ்சி மணியாச்சியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
    • டிக்கெட் எடுக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீள விட்டான் ரெயில் நிலையத்துக்கு வருகை தந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்.கிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் தமிழரசு மற்றும் உறுப்பினர்கள் ஜெயந்த் தாமஸ், ரமேஷ் ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தொடுதுறை சிஸ்டம் மீண்டும் அமைக்க வேண்டும்.

    தூத்துக்குடியில் இருந்து தொழிலதிபர்கள், வியாபாரிகள், வட மாநிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சாதாரண ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்டர்கள் இயங்கி வந்தனர்.

    தற்போது ஒரு கவுண்டர் தான் இயங்கி வருகிறது. இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மூடப்பட்ட 2-வது டிக்கெட் கவுண்டரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×