ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரெயில்வே தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டம் நடத்திய ரெயில்வே தொழிற்சங்கத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய ரெயில்வே தொழிற்சங்கத்தினர்.
Published on

மதுரை

மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று டி.ஆர்.இ.யூ.-சி.ஐ.டி.யூ. ரெயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். துணைப்பொதுச் செயலாளர் கார்த்தி சங்கிலி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சிவக்குமார், லெனின், கண்ணன், சங்கர நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். துணைத்தலைவர் வினோத்பாபு நன்றி கூறினார்.

ரெயில்வேயில் பல்ேவறு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒட்டன்சத்திரத்தில் கேட் கீப்பரை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com