என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வேலையளிப்போர், தொழிற்சங்கத்தினருக்கு சிறப்பு விருது - தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.
திருப்பூர் :
திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளுக்கு சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http://www.labour.tn.gov.in என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமரசம்) அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.