search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilor"

    • அ.தி.மு.க. கவுன்சிலர் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.
    • சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் பரமசிவம். இவர் அ.தி.மு.க.வில் 12-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார்சைக்கிளை தனது வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து நடை பயிற்சி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது அதன் மீது ஈரம் இருந்து உள்ளது.

    உடனே அதனை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது சீட் கிழிந்தும், உடைகள் மேல் பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது தான் அவர் தனது மோட்டார் சைக்கிள் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளதை அறிந்தார். இந்த சம்பவம் பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது உட் கட்சி குழப்பமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்புல்லாணியில் யூனியன் கூட்டம் நடத்தாததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி உள்பட 11 ஒன்றியங்கள் உள்ளன. யூனியன் கூட்டம் 60 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் விதி.

    திருப்புல்லாணி ஒன்றியத்தில் 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிய முடியாத சூழ்நிலையில் கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து பெரி யபட்டினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், திருப்புல்லாணி ஒன்றியத்தில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பெரியபட்டினம் ஊராட்சியில் யூனியன் நிதியிலிருந்து இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒன்றிய கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் எழுத்து வடிவமாகவே உள்ளது. எந்த பணியும் நடைபெறாத நிலையில் பெரியபட்டினம் ஊராட்சி உள்ளது என்றார்.

    • சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சரபோஜி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்டு கட்டிடம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., தஞ்சை மாமன்ற துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் நீலகண்டன்,காந்திமதி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சரபோஜி மார்க்கெட் சங்க தலைவர் சுதாகர் மற்றும் பொறுப்பாளர்கள் கனி ஸ்ரீநாத், சண்முகநாதன், சிவா, மணிகண்டன் மற்றும் சரபோஜி மார்க்கெட்டின் கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×