search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Rains"

    • சென்னையில் கனமழை பெய்து வருவதால் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது.
    • பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.

    பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
    • ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

    ஆவடி - 28 செ.மீ.

    சோழவரம் - 20 செ.மீ

    பொன்னேரி -19 செ.மீ

    செங்குன்றம் - 17 செ.மீ

    தாமரைப்பக்கம் - 17 செ.மீ

    கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ

    ஊத்துக்கோட்டை - 15 செ.மீ

    திருவள்ளூர் - 15 செ.மீ

    பூந்தமல்லி - 14 செ.மீ

    ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ

    திருத்தணி - 12 செ.மீ

    பூண்டி - 12 செ.மீ

    திருவாலங்காடு - 10 செ.மீ

    பள்ளிப்பட்டு - 6 செ.மீ

    ஆர்கே பேட்டை - 4 செ.மீ

    • கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் மழை வெள்ளம் தேக்கம்.
    • சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

    15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் 2 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. திருமங்கலம் எஸ்டேட் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    • பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் வெள்ளம் தேக்கம்.
    • 8 மணிக்குப் பிறகு சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்க பரிசீலனை.

    மிச்சாங் புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக ஊர்ந்து சுமார் 6 மணிக்குத்தான் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. தண்டவாளங்களில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக மெதுவாக இயக்கப்பட்டது. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என அனைத்து மின்சார ரெயில்களும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மழை மற்றும் சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்குவது குறித்த பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி பகுதிகளில் பிரதான ரெயில்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக கோவை, பெங்களூர் செல்லக்கூடிய 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில மழை தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவில் மிச்சாங் புயல் நிலை கொண்டுள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை நாளை முற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மழை காரணமாக சென்னை பரங்கிமலை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4 அடி மழை வெள்ளம் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தை பயன்படுத்தி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    • சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.
    • சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித்தீர்த்தது.

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை ஏழு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


    செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், அது 2429 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் உபரி நீர் திறப்பு 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    • 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
    • மழைநீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 29) மாலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.

     

    மழைநீர் தேக்கம் காரணமாக பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.

    சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை கிண்டி, வடபழனி, போரூர், தாம்ரம், சைதாப்பேட்டை செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

    • கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு.
    • நேற்று 200 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9 மணி முதல் 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் கொள்ளளவு 22.35 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு
    • திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மற்றும் காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

     குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை
    • மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் குமரி கடலோர மற்றும் அதன் தென்கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்ச் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மழைப்பொழிவு, நிவாரண முகாம்கள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில், அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்டுப்பட்டு மையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களிடமும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையை தொடர்ந்து மாநிலம் முழுக்க எடுக்கப்பட்டு வரும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.

    • வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தேனி, திருப்பூர் மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ×