search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chattisgarh"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்ததால், ராய்ப்பூரில் விமான சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடந்தது.
    இதனால் விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து வருகிறோம். விரைவில் விமான சேவை தொடங்கும் என தெரிவித்தனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து மற்றும் லாரியை எரித்து சேதப்படுத்திய நக்சல்கள், தண்டவாளத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். #NaxalAttack
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதியாகும். அதனால் இங்கு நக்சல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் கமவாடா பகுதியில் சாலையில் சென்ற பேருந்து மற்றும் லாரியை சிறைபிடித்த நக்சல்கள் அவற்றுக்கு தீ வைத்து எரித்தனர்.

    மேலும், தண்டேவாடா பகுதியில் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற பயணிகள் ரெயில் தடம் புரண்டது.

    தகவலறிந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். நக்சல்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தேங்காய் லாரிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 6500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Chhattisgarh #CannabisCaptured
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூர். இங்கு முக்கிய சாலை வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அந்த வழியாக வந்த தேங்காய் லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேங்காய்களுக்குள் மறைத்து மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றபட்ட கஞ்சா சுமார் 6545 கிலோ எடை கொண்டதாகும். இதுதொடர்பாக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உடையவர்கள் குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #Chhattisgarh #CannabisCaptured
    ×