search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV"

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    பிரைன்ட்நகரை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (55). இவர் பிரைன்ட்நகர் 7-வது தெருவில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    இவர்கள் இருவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவந்தாகுளம் பெருமாள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. மேலும் இதே வாலிபர்கள் பரமேஷ்வரன் கடையிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    அதன்பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் (20), ராம்குமார் (22) மற்றும் செல்வராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது திருச்செந்தூர், தூத்துக்குடி வடக்கு, மத்திய, தென்பாக காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    • கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
    • காமிராக்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரு வேம்புடையார் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 6 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதில் 4 சி.சி.டி.வி. காமிராக்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் வெங்கடே ஷ்வரி(வயது 30) நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமிராக்களை திருடி ச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது.

    திருப்பூர்,

    இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மாநிலத்தில் அடர்ந்த மற்றும் சாலை வசதி இல்லாத மலைப் பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதி மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் தொழில் நகரம் என்பதால் அருகாமையில் உள்ள ஈரோடு, கோவை, கரூர், சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வசதிக்காக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு காலையில் வேலைக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் பயணித்து ஏராளமானோர் தங்கள் பணியிடங்களை சென்றடைகின்றனர். தற்போது கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து கொரோனாக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்கள் இதுவரையிலும் இயக்கப்படாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகளும் கடந்த 2018 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பி.எஸ்.4 ரக பேருந்துகளாகும். இவற்றின் இருக்கைகள் மிக சொகுசாக அமைக்கப்பட்டு பயணிகள் சுகமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு தானியங்கி கதவுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த வகை பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது. பேருந்துகளில் உள்ள இருக்கைகளை சில மர்ம நபர்கள் கூரிய முனை கொண்ட பிளேடு அல்லது பாக்கெட் கத்தி போன்ற பொருட்களால் கிழித்து நாசப்படுத்தி வருகின்றனர். இச்செயல் கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை பேருந்துகளிலும் நடேந்தேறியுள்ளது. இவ்வாறு கிழிக்கப்படும் இருக்கைகளில் உள்ள ஸ்பான்ச்சையும் சிலர் பிய்த்து எறிவதால் ஒரு கட்டத்தில் அந்த இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து திருப்பூர் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,தொடர்ச்சியாக இருக்கைகள் நாசப்படுத்தும் மர்ம நபர்களால், சேதத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக ஓட்டுநர் ,நடத்துனர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் பேருந்து பாதுகாப்பு மற்றும் இது போன்ற குற்றச்செயல்களை கண்காணிக்க அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களை தடுக்கலாம் என்றனர்.

    திருட்டு வி.சி.டியை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் தீபாவளிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பட அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Piracy #CCTV
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள் - வெளி அரங்குகள் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வருகிற நவம்பர் 6-ஆம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட வேண்டும். வருகிற நவம்பர் 15-ந் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது.

    இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர். ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.



    திரைப்படத்தினை காணவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

    தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி வி‌ஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Piracy #CCTV #ProducersCouncil

    சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். #Vikram #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் தற்போது ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். ஹரி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ‘மூன்றாவது கண்’ என்ற குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று சென்னையில் வெளியிட்டார்.



    இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசும்போது, ‘சிங்கப்பூரைபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்’ என்றார்.
    தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுலவகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #RTO #TransportDept #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனவும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை போக்குவரத்து துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ×