என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடியில் மளிகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட  3 வாலிபர்கள் கைது -சி.சி.டி.வி. காமிரா காட்சிகளால் சிக்கினர்
  X

  கைதான பாஸ்கர், ராம்குமார், செல்வராஜை படத்தில் காணலாம்.


  தூத்துக்குடியில் மளிகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது -சி.சி.டி.வி. காமிரா காட்சிகளால் சிக்கினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
  • கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

  பிரைன்ட்நகரை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (55). இவர் பிரைன்ட்நகர் 7-வது தெருவில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

  இவர்கள் இருவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

  இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவந்தாகுளம் பெருமாள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

  அப்போது கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. மேலும் இதே வாலிபர்கள் பரமேஷ்வரன் கடையிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

  அதன்பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் (20), ராம்குமார் (22) மற்றும் செல்வராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

  கைது செய்யப்பட்டவர்கள் மீது திருச்செந்தூர், தூத்துக்குடி வடக்கு, மத்திய, தென்பாக காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  Next Story
  ×