search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysteriuos People"

    • பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது.

    திருப்பூர்,

    இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்து போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது. மாநிலத்தில் அடர்ந்த மற்றும் சாலை வசதி இல்லாத மலைப் பகுதியை தவிர்த்து மற்ற அனைத்து பகுதி மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் தொழில் நகரம் என்பதால் அருகாமையில் உள்ள ஈரோடு, கோவை, கரூர், சேலம்,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வசதிக்காக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு காலையில் வேலைக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் பயணித்து ஏராளமானோர் தங்கள் பணியிடங்களை சென்றடைகின்றனர். தற்போது கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து கொரோனாக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில்கள் இதுவரையிலும் இயக்கப்படாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகளும் கடந்த 2018 முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பி.எஸ்.4 ரக பேருந்துகளாகும். இவற்றின் இருக்கைகள் மிக சொகுசாக அமைக்கப்பட்டு பயணிகள் சுகமாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு தானியங்கி கதவுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த வகை பேருந்துகளுக்கு தற்போது பெரும் சவால் வந்து சேர்ந்துள்ளது. பேருந்துகளில் உள்ள இருக்கைகளை சில மர்ம நபர்கள் கூரிய முனை கொண்ட பிளேடு அல்லது பாக்கெட் கத்தி போன்ற பொருட்களால் கிழித்து நாசப்படுத்தி வருகின்றனர். இச்செயல் கோவை கோட்டத்தில் உள்ள அனைத்து பணிமனை பேருந்துகளிலும் நடேந்தேறியுள்ளது. இவ்வாறு கிழிக்கப்படும் இருக்கைகளில் உள்ள ஸ்பான்ச்சையும் சிலர் பிய்த்து எறிவதால் ஒரு கட்டத்தில் அந்த இருக்கையில் அமர முடியாத நிலை ஏற்படுகிறது.

    இச்சம்பவம் குறித்து திருப்பூர் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,தொடர்ச்சியாக இருக்கைகள் நாசப்படுத்தும் மர்ம நபர்களால், சேதத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக ஓட்டுநர் ,நடத்துனர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.மேலும் பேருந்து பாதுகாப்பு மற்றும் இது போன்ற குற்றச்செயல்களை கண்காணிக்க அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்களை தடுக்கலாம் என்றனர்.

    ×