search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cattle market"

    • 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
    • திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

    தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.

    வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
    • மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம்காங்கயம் அருகே திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம்,மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெறும்.இதில் பழமை வாய்ந்த மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1000 ஆண்டுகள் பழமையான மாட்டுச்சந்தையும் நடைபெறுவது வழக்கம்.

    களை கட்டும் மாட்டுச்சந்தை

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி( புதன்கிழமை ) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த புதன்கிழமை முதல் மாட்டுச்சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு, வாங்கியும் செல்கின்றனர். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    10ம் நூற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு,வீர ராசேந்திர சோழனால் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தைப்பூச விழாவும், தினப்பூஜைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

    மாடுகள் வரத்து அதிகரிப்பு

    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் உள்ள முருக கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோவிலும், இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

    கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது.மேலும் புதுக்கோட்டை ,திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள்வாங்க வந்துள்ளனர். இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேர்த்திக்கடன்

    இந்த ஆண்டு மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர். இங்கு 6 மாத இளங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் 1.25 லட்சம் வரையும்,ஒரு சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையும், இனவிருத்திக் காளைகள் 1 லட்சம் முதல் 1.60 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.இச்சந்தையை ஒட்டி கோவிலின் முன்பாக மாடுகளுக்கான கயிறுகள்,மணிகள்,குஞ்சம்,சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும்,மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோவில் முன்பாக மாடுகளுக்கு பூஜைகள் செய்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

    • சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.
    • ஏப்ரல் 18 ந் தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கிவிட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் மாட்டுச்சந்தை கூடியது. 2 ஆயிரம் மாடுகள் இது வரை விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியையொட்டி விக்கிரம சோழீஸ்வர சாமி கோவில் தேர் திருவிழா நடைபெறும்.இதைத்தொடர்ந்து மாட்டு சந்தை கூடும். இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் வாங்கியும் செல்வார்கள். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா அடுத்த மாதம் மே 4-ந் தேதி நடைபெற உள்ளது. மே 5-ந் தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியையொட்டி இந்த ஆண்டு இந்த மாதம் ஏப்ரல் 18 ந்தேதி முதல் மாட்டுச்சந்தை கூடத் தொடங்கி விட்டது. இந்த மாட்டுச்சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 2ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் வந்து தங்களுக்கு பிடித்த நாட்டு மாடு மற்றும் மாட்டு கன்று, காளைகளை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து 3 தினங்களில் இன்னும் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வரும்.. மாட்டுச்சந்தை இந்த மாத கடைசி வரை நடைபெறும் என்று கூறுகின்றனர்.

    இந்த மாட்டுச்ச ந்தையையொட்டி மாடுகளுக்கு தேவையான மூக்கு கயிறு, தலை கயிறு, தும்பு கயிறு, சாட்டை, மாடு கட்டும் கயிறு, தும்பு கயிறு கடைகள் போட ப்பட்டி ருந்தன.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது மாடுகளுக்கு தேவையான கயிறு மற்றும் சாட்டைகளை வாங்கி சென்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது
    • சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் நடைபெற்று வந்த மாட்டு வாரச்சந்தை கொரோனா தொற்றினால் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தன.

    இவை நேற்று முதல் மல்லவாடி சந்தை மேட்டு பகுதியில் தொடங்கியது. சந்தை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகின்றன. இந்த சந்தையில் மாடு, ஆடு, கோழி விற்பனை மற்றும் காய்கறிகள் உட்பட பல்வேறு விதமான கடைகளும் இங்கு வைக்கப்பட்டு வியாபாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் நேற்று முதல் தொடங்கியதால் சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒரு கன்று குட்டியும், 2-வது பரிசாக ஆட்டுக்குட்டியும், 3-வது பரிசாக கோழியும் வழங்கப்பட்டன.

    • புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது.

    வியாபாரிகள்

    ஆடுகளை வாங்க விற்க கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன .

    இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டிகள் ரூ.8000-க்கும், பசுமாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனையானது. தொடர்ந்து பெய்த மழையால் வர்த்தகம் சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்தம் ரூ. 1 ¾ கோடிக்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.

    • கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.
    • தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 1945 முதல் கால்நடைச்சந்தை நடந்து வருகிறது. தென்னம்பாளையத்தில் நடந்து வந்த மாட்டுச்சந்தை தற்போது அமராவதிபாளையத்தில் நடந்து வருகிறது.வாரம் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஆயிரம் முதல் 1,500 மாடுகள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை விலை பேசி வாங்க 2,500 பேர் வருகின்றனர். கேரளாவில் இருந்தும் திருப்பூருக்கு வியாபாரிகள் வருகின்றன்ர. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் நம்பியே சந்தை நடக்கிறது. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4மணி வரை திருவிழா போல சந்தை நடக்கிறது. குறைந்தபட்ச விலை 3,000 ரூபாய் துவங்கி, அதிகபட்சம், 55 ஆயிரம் வரை மாடுகள் விலை போகிறது. காங்கயம் காளைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும்.

    சந்தைக்கு 800 முதல் ஆயிரம் கால்நடைகள் கொண்டு வரப்படுவதால் குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2019ல் 50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.

    அரை நூற்றாண்டு கடந்தும் செயல்பட்டு வரும் இச்சந்தைக்கு பல்வேறு மாநிலத்தவர் வந்து செல்ல தேவையான அனுமதி, போக்குவரத்து வசதி அமைந்தால், திருப்பூரில் கால்நடை வணிகம் மேலும் சிறக்கும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

    கால்நடை விலை நிர்ணயத்துக்கு குழுவெல்லாம் கிடையாது. விவசாயி - வியாபாரி அல்லது இரு வியாபரிகள் இடையே நடக்கும் ஒரு நிமிடம் பேரம் மட்டுமே விலை. படிந்து விட்டால் விலையை கொடுத்து மாட்டை கயிறுடன் அவிழ்த்து லாரியில் ஏற்றிவிடுவார்கள். சுவராசியமான வாக்குவாதங்களும் நடக்கும். 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை சர்வசாதாரணமாக சட்டை, டவுசர் பாக்கெட்டில் வியாபாரிகள் பணம் வைத்திருப்பார்கள்.   

    • வி.புதுக்கோட்டை அய்யர் மடத்தில் ஊராட்சியின் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
    • மாட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் வாகனத்தை நிறுத்தி வியாபாரிகள், விவசாயிகள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர்

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.புதுக்கோட்டை அய்யர் மடத்தில் ஊராட்சியின் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இன்று 2-வது வாரத்தில் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் மாடுகளுடன் அதிகாலை முதல் குவியதொடங்கினர்.

    இந்த நிலையில் முறையாக அனுமதி வாங்கவில்லை. எனவே மாட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் வாகனத்தை நிறுத்தி வியாபாரிகள், விவசாயிகள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியல் செய்யபோவதாக அறிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வியாபாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்போது இங்கு சந்தை நடத்த அனுமதிபெறவில்லை. அனுமதி கிடைத்தவுடன் தாராளமாக மாட்டுச்சந்தை நடத்தலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனைஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் திரண்டனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் வியா–ழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களி–லிருந்தும், மாடுகள் அதிக–ளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் தமிழகம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். மேலும், இதில், இன்று நடை–பெற்ற சந்தை நாளின்போது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக வழக்கத்தை–விட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது. வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், மாடுகளை வாங்க வியா–பாரிகள் அதிகம் வந்தி–ருந்தனர். மேலும், தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    ×