search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் மாட்டுச்சந்தை அமைக்கும் பணி - அமைச்சர் ஆய்வு
    X
    மாட்டுச்சந்தை அமைக்கும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்த காட்சி. 

    காங்கயத்தில் மாட்டுச்சந்தை அமைக்கும் பணி - அமைச்சர் ஆய்வு

    • 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
    • திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.

    தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.

    வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×