search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டு சந்தை"

    • ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது
    • அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பெயர் பெற்ற சந்தையாக விளங்கி வருகின்றது.

    இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களி இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது வரையில் இந்த சந்தையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

    நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிய தொடங்கினர்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி மேல் மாட்டுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.

    • திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.
    • காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை சந்தை நடந்தது. பெருந்தொழுவு சாலையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வாகனங்கள் இடையூறாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சந்தை நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12 மணிக்கு சந்தை நிறைவு பெறும். சந்தை அருகே இரண்டு ஏக்கர் மைதானத்தில் விரிவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு மைதானம் திறக்கப்பட்டது.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் நகர தி.மு.க. சார்பாக தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. வருமுன் காப்போம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களை தேடி மருத்துவத் திட்டம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பஸ், நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

    மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சியில் மக்கள் கோரிக்கையை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டப்படும். காங்கயத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடைபெறுவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி வழங்க உள்ளார். விரைவில் காங்கயம் - தாராபுரம் சாலையில் மாட்டு சந்தை தொடங்கும். ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் , சிவன்மலை அடிவாரப்பகுதியில் விளையாட்டு அரங்–கம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    காங்கயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டம் பரஞ்சேர்வழியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கலந்து கொண்டு தி.மு.க. அரசு 2 ஆண்டு காலத்தில் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ், ஒன்றிய அவைத்தலைவர் எம்.ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவாநந்தன் உள்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது
    • சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் நடைபெற்று வந்த மாட்டு வாரச்சந்தை கொரோனா தொற்றினால் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தன.

    இவை நேற்று முதல் மல்லவாடி சந்தை மேட்டு பகுதியில் தொடங்கியது. சந்தை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகின்றன. இந்த சந்தையில் மாடு, ஆடு, கோழி விற்பனை மற்றும் காய்கறிகள் உட்பட பல்வேறு விதமான கடைகளும் இங்கு வைக்கப்பட்டு வியாபாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் நேற்று முதல் தொடங்கியதால் சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒரு கன்று குட்டியும், 2-வது பரிசாக ஆட்டுக்குட்டியும், 3-வது பரிசாக கோழியும் வழங்கப்பட்டன.

    • புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது.

    வியாபாரிகள்

    ஆடுகளை வாங்க விற்க கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன .

    இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டிகள் ரூ.8000-க்கும், பசுமாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனையானது. தொடர்ந்து பெய்த மழையால் வர்த்தகம் சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்தம் ரூ. 1 ¾ கோடிக்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.

    • பக்ரீத் பண்டிகை எதிரொலியாக தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் திரண்டனர்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் வியா–ழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களி–லிருந்தும், மாடுகள் அதிக–ளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் தமிழகம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். மேலும், இதில், இன்று நடை–பெற்ற சந்தை நாளின்போது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக வழக்கத்தை–விட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது. வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், மாடுகளை வாங்க வியா–பாரிகள் அதிகம் வந்தி–ருந்தனர். மேலும், தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

    ×