அமராவதிபாளையம் மாட்டுச்சந்தை நேரம் மாற்றம்

திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை சந்தை நடந்தது. பெருந்தொழுவு சாலையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வாகனங்கள் இடையூறாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சந்தை நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12 மணிக்கு சந்தை நிறைவு பெறும். சந்தை அருகே இரண்டு ஏக்கர் மைதானத்தில் விரிவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு மைதானம் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com