பக்ரீத் பண்டிகை எதிரொலி: தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு திரண்ட வியாபாரிகள்

பக்ரீத் பண்டிகை எதிரொலியாக தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் திரண்டனர்.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.
தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு திரண்ட வியாபாரிகளை படத்தில் காணலாம். 
தீவனூர் சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு திரண்ட வியாபாரிகளை படத்தில் காணலாம். 
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் வியா–ழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களி–லிருந்தும், மாடுகள் அதிக–ளவு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் தமிழகம் மற்றும் வெளி மாநில வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். மேலும், இதில், இன்று நடை–பெற்ற சந்தை நாளின்போது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக வழக்கத்தை–விட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது. வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், மாடுகளை வாங்க வியா–பாரிகள் அதிகம் வந்தி–ருந்தனர். மேலும், தமிழ–கத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்பானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com