search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் அருகே மாட்டுச்சந்தையை தடுத்து நிறுத்திய போலீசார்
    X

    வியாபாரிகள், விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வேடசந்தூர் அருகே மாட்டுச்சந்தையை தடுத்து நிறுத்திய போலீசார்

    • வி.புதுக்கோட்டை அய்யர் மடத்தில் ஊராட்சியின் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
    • மாட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் வாகனத்தை நிறுத்தி வியாபாரிகள், விவசாயிகள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர்

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வி.புதுக்கோட்டை அய்யர் மடத்தில் ஊராட்சியின் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் மாட்டுச்சந்தை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இன்று 2-வது வாரத்தில் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் மாடுகளுடன் அதிகாலை முதல் குவியதொடங்கினர்.

    இந்த நிலையில் முறையாக அனுமதி வாங்கவில்லை. எனவே மாட்டுச்சந்தை நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போலீசார் வாகனத்தை நிறுத்தி வியாபாரிகள், விவசாயிகள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியல் செய்யபோவதாக அறிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வியாபாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தற்போது இங்கு சந்தை நடத்த அனுமதிபெறவில்லை. அனுமதி கிடைத்தவுடன் தாராளமாக மாட்டுச்சந்தை நடத்தலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    இதனைஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×