search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "california"

    கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதி, தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். #California #YosemiteNationalPark #SelfieKills
    நியூயார்க்:

    உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால், இந்திய தம்பதி தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.

    அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதிகளான விஷ்ணு விஷ்வநாத், மீனாட்சி மூர்த்தி பலதரப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் முகடில் ஆபத்தான நிலையில், செல்பி எடுத்துள்ளனர்.


    அப்போது எதிர்ப்பாராத விதமாக 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #California #YosemiteNationalPark #SelfieKills

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர். #USPlaneCrash
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டா அனா நகரத்தில் உள்ள சூப்பர் மார்கெட் பகுதியின் கார் பார்க்கிங்கில் நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் நொறுங்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா ரக விமானமான இது எஞ்சின் கோளாறு காரணமாக கீழே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் உள்பட அனைவரும் பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கலிபோர்னியா மலைமுகட்டில் கார் விபத்தில் சிக்கிய இளம்பெண், ரேடியேட்டர் நீரை மட்டுமே குடித்து 7 நாட்கள் உயிர் வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #California
    நியூயார்க்:

    கலிபோர்னியாவில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற 23 வயது பெண் போலந்தில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு ஜூலை 6-ம் தேதி காரில் சென்றுள்ளார். ஆனால் அவர் தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர். பிக் சர் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட ஜோடி, ஒரு பெண் காயங்களுடன் மலைமுகட்டில் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டனர்.



    சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த பெண் ஏஞ்செலா ஹெர்னாண்டஸ் என பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஏஞ்செலாவை மீட்டவர்கள் கூறும்போது, ஏஞ்செலாவை மீட்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், தோள்பட்டையில் காயங்கள் இருந்ததாகவும் கூறினர்.

    7 நாட்களாக உடலில் காயத்துடன் தனிமையில் உயிர்தப்பிய ஏஞ்செலா குறித்து பேசிய நெடுஞ்சாலை அதிகாரி, 7 நாட்களாக உணவு இன்றி, தான் சென்ற காரின் ரேடியேட்டரில் இருந்த நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

    சாலையில் செல்லும்போது வனவிலங்கு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஏஞ்செலா தெரிவித்தார். தற்போது ஏஞ்செலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். #California
    ×