search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bullock Cart Race"

    • இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி உற்சவம் நடந்தது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடுமாடு போட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    இந்த மாட்டு வண்டி போட்டியில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாடுகளுக்கான 8 மைல் தூரத்திற்கு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்

    பி.ராஜசேகரன் மற்றும் திருவாதவூர் கிராமத்தார்கள் மற்றும் திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடுமாட்டு போட்டியில் ரூ. 30 ஆயிரத்து 1-யை திருவாதவூர் அருகே உள்ள கழுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி வென்றது. 2-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து1-யை அ.வல்லா ளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசு ரூ.20ஆயிரத்து 1-யை கோட்ட நத்தம்பட்டி ரவி மற்றும் திருவாதவூர் எஸ்.எம். பிரதர்ஸ் ஆகியோர் வண்டியும், 4-ம் பரிசு 12 ஆயிரத்து 1-யை திருவாதவூர் தன்வந்த் பிரசாந்த் வண்டியும் வென்றன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்க ளுக்கு விழா கமிட்டியா ளர்கள் பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பெரிய மாடு, சின்ன மாடு, போட்டி நடந்தது. திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    • விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
    • போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் நாகராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    விருதுநகர், தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டி விளாத்திகுளம் மதுரை நெடுஞ்சாலையில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தது.

    போட்டி பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிறிய மாட்டு வண்டியில் 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 10 கிலோமீட்டர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 2-வது போட்டியாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் 45 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 6 கிலோமீட்டர் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


    இப் போட்டியை காண விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • கடலாடியில் தேவர் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா மற்றும் 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் சார்பில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு பந்தயம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கடலாடி நகர் தேவர் உறவின் முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார்.

    ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவர் முனியசாமி பாண்டியன் ஒருங்கிணைத்தார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். நடுமாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் முனியசாமி தொடங்கி வைத்தார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைத்தார். பெரியமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு மதுரை மோகனசாமி குமாரின் மாடும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமாரின் மாடும், நடுமாடு பந்தயத்தில் மதுரை அவனியாபுரம் மோகன சாமி குமார் மாடு முதல் பரிசையும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமார் மாடும், 3-வது பரிசை மதுரை ஜெய்ஹிந்துபுரம் அக்னி முருகன் மாடும், 4-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும் பெற்றன.

    சின்ன மாடு பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும், 3-மூன்றாவது பரிசை பேரையூர் இலந்தைகுளம் முனியசாமி மாடும் பெற்றன. விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.

    • தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும்.
    • இந்த தகவலை கடலாடி ஒன்றிய குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-ம் ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா, 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 5-ம் ஆண்டு வருஷாபிஷேகம் ஆகிய விழாக்களை முன்னிட்டு ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் நடத்தும் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையுடன் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு பந்தயம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் கூறியதாவது:-

    வருகிற (27-ந் தேதி) கடலாடியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்குகிறார். கடலாடி தேவர் உறவின்முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகிக்கிறார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைக்கிறார். நடு மாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் சூரி முனியசாமி தொடங்கி வைக்கிறார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைக்கிறார். பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி வாங்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ரேக்ளா ரேஸ் முன்னாள் மாநில தலைவர் மோகன் சாமி குமார் வழங்குகிறார்.

    பெரிய மாடு, நடமாடு, சின்ன மாடு பந்தயத்தில் கொடி கொடுக்கும் சாரதிக்கு கிடாய் பரிசை ராமேசுவரம் துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி வழங்குகிறார். விழாவை முன்னிட்டு வெற்றி பெறும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசை கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் வழங்குகிறார். விழாவையொட்டி பொது அன்னதானம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை யொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது.
    • நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் உடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழாவை யொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது.

    முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு கூடலூர் பைபாஸ் சாலையில் இருந்து போட்டி தொடங்கியது. தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடு மாடு, பெரிய மாடு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.

    இதில் திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 190 பேர் மாட்டு வண்டி காளைகளுடன் போட்டியில் பங்கேற்றனர். காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை, கேடயங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 15 பேர் பரிசுகள் பெற்றனர்.

    குறிப்பாக பெரிய மாடு பிரிவுக்கு அதிகபட்ச தூரமாக கூடலூரில் இருந்து லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் வரை நிர்ணயிக்கப்பட்டது. முதல்பரிசு ரூ. 50 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ. 40 ஆயிரமும், 3-ம்பரிசு ரூ 30 ஆயிரமும் வழங்கப்பட்டது. கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகள் உடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


    • 17 மாட்டுவண்டிகளும், 10 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன
    • 7 கிலோமீட்டர் தூரம் பந்தயம் நடைபெற்றது

    கல்லிடைக்குறிச்சி:

    முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் அம்பையில் நடைபெற்றது.

    பந்தயத்தை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் பிரபாகரன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரணி சேகர், வி.கே.புரம் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சேரன்மகாதேவி கிழக்கு முத்து பாண்டியன் என்ற பிரபு, மணிமுத்தாறு நகர செயலாளர் முத்து கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம் வரவேற்றார்.

    பந்தயத்தில் சிறிய வகை மாட்டு வண்டிகள் 5 கிலோமீட்டர் தூரமும், பெரிய வகை மாட்டுவண்டிகள் 7 கிலோமீட்டர் தூரம் பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 மாட்டுவண்டிகளும், 10 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டது.

    அம்பை ராணி பள்ளியில் இருந்து காக்கநல்லூர் விலக்கு வரை மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரம் பந்தயம் நடைபெற்றது,

    மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாட்டு வண்டி, குதிரை வண்டி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அம்பை 21-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் செய்திருந்தார்.

    கணேஷ்குமார் ஆதித்தன், சஞ்சய் செல்வம், செல்வ சூடாமணி, ஆதி மூலம், சாட்டுப்பத்து ஊராட்சி கிளை செயலாளர் பிரபு, ராம் சங்கர், பாப்பாக்குடி ஊராட்சி தலைவர் ஆனைகுட்டி பாண்டியன், நந்தன்தட்டை சுந்தர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமையில், இன்ஸ்பெ க்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். 

    ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.
    அறந்தாங்கி:

    ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாட்டில் முதல்பரிசை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.பி. அன்பு அம்பலம் மாடும், இரண்டாம்பரிசை தினையாகுடி ஆர்.கே.சிவா மாடும், மூன்றாம்பரிசை உடப்பன்பட்டி பூமிமாடும் தட்டிச்சென்றன. 

    நடுமாட்டில் முதல்பரிசை புண்ணியவயல் மண்தின்னிகாளி மாடும், இரண்டாம் பரிசை செல்வ னேந்தல் சுந்தர்ராஜன்சேர்வை மாடும், மூன்றாம்பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய  வெள்ளாளத் தேவர் மாடும்தட்டிச் சென்றன, கரிச்சான் மாட்டில் 38 வண்டிகள் சேர்ந்ததால் ஒரு செட்டில் விடமுடியாது  என்பதால் அதை இரண்டு செட்டாக விடப்பட்டது . அதில் முதல்செட்டில் முதல்பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ்ராவுத்தர் மாடும், இரண்டாம் பரிசை கடம்பங்குடி காமாட்சி அம்மன் மாடும்,  மூன்றாம் பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாடும் தட்டிச்சென்றன. 

    இரண்டாவது செட்டில் முதல் பரிசை வெள்ளூர் அய்யப்பன் மாடும், இரண்டாம் பரிசை கருப்பூர் வீரையா சேர்வை மாடும், மூன்றாம் பரிசை கல்லாபேட்டை மண்டையம்மன் மாடும் தட்டிச் சென்றன. விழா ஏற்பாடுகளை புண்ணிய வயல் கிராமத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர்.
    ×