search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூஜை விழா"

    • 14-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் 8 மணிக்கு தேவாரம் திருவாசகம் இன்னிசை பாராயணம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
    • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பத்தூர் இசக்கி நாட்டியாலயா மற்றும் ஆவடி தாண்டவா நாட்டியப்பள்ளி மாணவ- மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருநின்றவூரில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவிலில் பூசலார் நாயன்மார் குருபூஜை பெரு விழா வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் 8 மணிக்கு தேவாரம் திருவாசகம் இன்னிசை பாராயணம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. காலை 11 மணிக்கு பூசலார் நாயனாருக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அம்பத்தூர் இசக்கி நாட்டியாலயா மற்றும் ஆவடி தாண்டவா நாட்டியப்பள்ளி மாணவ- மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பூசலார் நாயனார் திருக்கோவிலில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பூசலார் நாயனார் சிவபெருமானோடு ஐக்கி யமாகும் திருக்காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா பி.எஸ்.எஸ்.எஸ். ஜெகன் சோமசுந்தரம் செட்டியார், பூசலார் குரு பூஜை பரம்பரை உபயதாரர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ஆர்.ராமசுப்பிரமணியன், மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் மேலாளர் ஜி. தண்ணீர்மலை செட்டியார், சி. கோட்டீஸ்வரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
    • மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    பூதப்பாண்டி :

    அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் பொதுமக்கள் சார்பில் பூதப்பாண்டியை அடுத்துள்ள தெரிசனங்கோப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 116-வது குருபூஜை விழா நடந்தது.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க செயலாளர் சுபாஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகன், தோவாளை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஜான் அசூன், வார்டு உறுப்பினர் ரதீஷ், மாவட்ட பிரதிநிதி ஆஸ்டின் பெனட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
    • முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டியில் பிரமலைக்கள்ளர்நலசங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா- குருபூஜை விழா நடந்தது.

    சங்கதலைவர் தங்க மலைச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந் திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முத்துராமன், அ.தி.மு.க.பேரூர் செயலாளர் அசோக்குமார், மாநகராட்சி அதிகாரி பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன், சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ராமன் கொடியேற்றினார். உருவபடத்திற்கு ஆசிரியர் ஜெயராஜ் மாலை அணி வித்தார். அரண்மனையார் ஞானசேகர பாண்டியன் குருபூஜையை செய்தார். அய்யாவு இருளாண்டி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். பேரூர் செயலாளர் பால்பாண்டி யன், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் நிர்வாகிகள் செல்வம், உதயாபாலு, பால்பாண்டி, முருகன், வை.பாண்டி, ரூபன்சக்ரவர்த்தி, போஸ், விஜி, விக்னேஷ், கவாஸ்கர், ராமமூர்த்தி, சிரஞ்சிவி, ரமேஷ், பிரபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வபாண்டியன் நன்றி கூறினார். மதுரை வடக்குமாவட்ட மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் கருப்பையா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். ஒன்றிய துணை செயலாளர் கருப்புமணி வண்ணன் வரவேற்றார்.

    மாநில பொருளாளர் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இதில் கம்பன் இலக்கியமன்ற தலைவர் புலவர் அழகர் சாமி, அ.தி.மு.க.பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், தே.மு.தி.க. பேரூர் செயலாளர் பாலாஜி, கிளை செயலாளர் அன்பு, சின்னு கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையாபுரி நன்றி கூறினார்.

    • நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே 18 சித்தர்களின் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

    சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18, சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பீடத்தின் நிறுவனர் நாடி. ராஜேந்திரன் சுவாமிகளின், 6 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    தொடர்ந்துவிநாயகர், பார்வதி, பரமசிவன் மும்மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டி, சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற மும்மூர்த்தி மகாயாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பி.வி.பாரதி, அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, பொறுப்பாளர்கள் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், பொறியாளர் மார்கோனி, சீர்காழி அதிமுக முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன், நாடி பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.
    • விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா வினை முன்னிட்டு விசேஷ அபிேஷகம், அல ங்கார பூஜைகள் மற்றும் 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.

    பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். விழாவில் சுந்தரமூ ர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடும் சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாய ன்மார்களை வழிபட்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருமங்கலம் நகரில் வீரன் அழகுமுத்துக்கோன் 313-வது குருபூஜை விழா நடந்தது.
    • தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருமங்கலம்

    இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கி–லேயருக்கு எதிராக தீரத்து–டன் போராடிய வீரன் அழகுமுத்துக்கோ–னின் 313-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக நடைபெற் றது.

    இந்நிகழ்வினில் மாவட்ட கட்சி அலுவல–கத்தில் அலங் கரித்து வைக்கப் பட்டிருந்த வீரன் அழகு–முத்துக்கோ–னின் திருவு–ருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேட–பட்டி மு.மணிமாறன் மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் வீரன் அழகு–முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,கழக விவசாய–அணி மாநில இணைச் செயலாளர் ம.முத்துராம–லிங்கம், மாவட்ட அவைத்த–லைவர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சிவ–னாண்டி.

    தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல்,துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீசன், காளிதாஸ், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் தனபாண் டியன், மதன்குமார், தங்கப்பாண்டி, ராமமூர்த்தி, சண்முகம், சுதாகர், வேட் டையன், சிவா, வருசை முகம்மது,

    திருமங்கலம் நகர்மன்ற தலைவர் மு.ரம்யா முத்துக் குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், நகர் கழகச் செயலாளர் ஸ்ரீதர், துணைச் செயலாளர் செல் வம், மாவட்ட அணித்த–லைவர், துணை அமைப்பா–ளர்கள் ராஜசேகர், ஜஸ்டின் திரவியம், ராஜபிரபாகரன், மைதீன்பிச்சை, ரிச்சர்டு இன்பம், இந்திராணி, ஜெயக் குமார்,

    வலைத்தள பொறுப்பா–ளர் சொர்ணா வெற்றி, இளைஞரணி ஹரி, கௌதம், கீழக்குடி செல் வேந்திரன், மாவட்ட பிரதி–நிதி ரஞ்சித்குமார், ராதா–கிருஷ்ணன்,சேட் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திருவாசகம் முற்றோதலும், தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை யும், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    இதில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

    • சோமப்பா சுவாமியின் 55-வது குருபூஜை விழா
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர் மலை) சூட்டுக்கோல் ராம லிங்க விலாசம் சோமப்பா சுவாமிகள் 55-ம் ஆண்டு குருபூஜை இன்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற் றது.

    திருக்கூடல் மலையில் தனி சன்னதியில் சோமப்பர் அருள் பாலித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறு வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் அவரது குருபூஜை விழா கொண்டா டப்படும் அதன் அடிப்படை யில் அவரது 55-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை குருபூஜையை முன்னிட்டு சோமப்பா சுவா மிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு சாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் அங் குள்ள சிவபெருமானுக்கு சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சோமப்ப சுவாமியை தரிச னம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. குருபூஜை விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோப்பணம் பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் கோயிலில் 10-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா நேற்று நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் யாகவேள்வி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் கோயிலில் 10-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் யாகவேள்வி நடைபெற்றது. 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் சித்தர் திருவீதி உலா வலம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    குருபூஜை விழாவில் சித்தரின் சமாதிக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    குருபூஜைக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.
    • பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ. உ .சிதம்பரம் பிள்ளையின் 86வதுகுருபூஜை விழா வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா, மாவட்ட செயலாளர் ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடந்தது.

     திருப்பூர் மங்கலம் ரோடு,பாரப்பாளையம் நால்ரோடு சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ .உ . சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மத்தியமாவட்ட தலைவர் சுபிராஜ், முருகேசன், மத்தியமாவட்ட செயலாளர் பா.அன்பரசன்,மற்றும் பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

    • கடலாடியில் தேவர் குருபூஜை விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 115-வது ஆண்டு ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா மற்றும் 34-ம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா, ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி ஆப்பநாடு மாட்டுவண்டி பந்தய குழுவினர் சார்பில் பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு பந்தயம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கடலாடி நகர் தேவர் உறவின் முறை தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார்.

    ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய குழு தலைவர் முனியசாமி பாண்டியன் ஒருங்கிணைத்தார். பெரிய மாடு பந்தயத்தை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். நடுமாடு பந்தயத்தை ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் முனியசாமி தொடங்கி வைத்தார்.

    சின்ன மாடு பந்தயத்தை முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் கீழத்தூவல் ராமசாமி தொடங்கி வைத்தார். பெரியமாடு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு மதுரை மோகனசாமி குமாரின் மாடும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமாரின் மாடும், நடுமாடு பந்தயத்தில் மதுரை அவனியாபுரம் மோகன சாமி குமார் மாடு முதல் பரிசையும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் விஜயகுமார் மாடும், 3-வது பரிசை மதுரை ஜெய்ஹிந்துபுரம் அக்னி முருகன் மாடும், 4-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும் பெற்றன.

    சின்ன மாடு பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடும், 2-வது பரிசை தஞ்சாவூர் காளிமுத்து மாடும், 3-மூன்றாவது பரிசை பேரையூர் இலந்தைகுளம் முனியசாமி மாடும் பெற்றன. விழா கமிட்டியாளர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆப்பநாடு மாட்டு வண்டி பந்தய நிர்வாகிகள் செய்தி ருந்தனர்.

    • இன்று முதல் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி தனி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மதுரை, ராமநாதபுரம் கோவை உள்பட 28 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 5 டிஐஜிக்களும் இதில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தேவர் குருபூஜை விழாவையொட்டி இன்று முதல் 30ந் தேதிவரை 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

    தடை செய்யப்பட்ட பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவும், காவல் துறையின் உத்தரவுகளை மீறி செயல்படுபவர்களின் வாகனங்களை, கண்காணிப்பு கேமராக்கள் பதிவு மூலம் ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அவர் எச்சரித்தார்.

    இதனிடையே, தேவர் ஜெயந்தி விழாவின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

    ×