சென்னிமலை கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
Published on

சென்னிமலை:

சென்னிமலை டவுன், கிழக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள கைலாநாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா வினை முன்னிட்டு விசேஷ அபிேஷகம், அல ங்கார பூஜைகள் மற்றும் 63 நாயகன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது.

பூஜைகளை சென்னி மலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். விழாவில் சுந்தரமூ ர்த்தி நாயனார் உற்சவர் புறப்பாடும் சிறப்பாக நடந்தது.

விழாவிற்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாய ன்மார்களை வழிபட்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com