search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book fair"

    • புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23-ந்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா 100 அரங்குகளுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை திறந்து இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புத்தகத் திருவிழாவுக்கான பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். மேலும் இது குறித்து குறும்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. குறும்படத்தை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு காண்பிக்கவும், சமூக வலைதளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மூலம் ஒளிபரப்பவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறும்போது, காஞ்சிபுரத்தில் புத்தக திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இப்போதைக்கு 100 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த புத்தகத் திருவிழாவிற்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நட்சத்திர பேச்சாளர்கள், கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் விரும்பும் நவீன அம்சங்கள் ஆகியவை இதில் இடம்பெற உள்ளன என்றார்.

    இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் கூறும்போது, புத்தக திருவிழாவில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட உள்ளதாக கூறினார்.

    • செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நூலகர் ராமசாமி வரவேற்று பேசினார்.

    வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பககுற்றாலம், நூலக போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.


    மதுரையை சேர்ந்த சர்வதேச டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், செங்கோட்டை காதி நிறுவன மேலாளர் மாரியப்பன், ரோட்டரி கிளப்ஆப் குற்றாலம் தலைவர் திருவிலஞ்சி குமரன், ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் அபு அண்ணாவி, எஸ்.எம்.எஸ்.எஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சங்கர்ராமன், கடையநல்லூர் வாசகர் வட்ட தலைவர் ஜெயராமன், சுரண்டை புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், வாசகர் அய்யப்பன், மைதீன் பிச்சை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பணியாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர்:முதல் முறையாக புத்தக கண்காட்சி நடக்கிறது.
    • புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் ன்று உத்தரவிட்டார்.

    அதனடிப்படையில் விருதுநகரில் முதல்முறை யாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர்- மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.

    இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு தனித்தனியாக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.

    இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் இடம் பெறுகின்றன.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்த புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.31 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
    • கலெக்டர் பங்கேற்பு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பாக முதலாவது மாபெரும் புத்தகக் கண்காட்சி கடந்த 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை நடந்தது.

    நிறைவு நாளான நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று புத்தகம் வாசித்தலின் முக் கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். விழாவில் நடந்த கலை நிகழ்ச்சிகள், கருத்த ரங்குகள்,பட்டிமன்றங்கள் போன்றவற்றில் பங்கேற்று கண்டு களித்தார்.

    புத்தகக் கண்காட்சியில் 40 புத்தக அரங்குகள் அமைக்கப் பட்டு இருந்தன. 13 அரசு துறைகள் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், 6 உணவு விற்பனை அரங்குகளும் அமைக் கப்பட்டு இருந்தன. கண்காட்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு தேவையான புத்தகங் களும், மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு வகை யான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

    தினமும் புத்தகக் கண்காட்சியில் மாலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 6 பரத நாட்டிய குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பேச்சாளர்களின் 7 பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடந் தன.

    பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிய எழுத்தா ளர்களின் 10 புத்தகங்கள் மாவட்ட கலெக்டரால் தினமும் நடந்த நிகழ்ச்சிகளில் வெளியிடப்பட்டன.

    புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 91 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 14-ந்தேதியில் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.31%, லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஸ்வ ரன், கல்லூரி முதல்வர் பூங்குழலி, துணை கலெக்டர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தாசில் தார்கள் ஆனந்தன், விஜயகுமார் (குற்றவியல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன் பெறும் வகையில் புத்தக கண்காட்சி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கி 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் அனைவரும் வரவேற்றார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாள ர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தி னர்களின் கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்க ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, வடிவேல், கலைக்குமார், நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், பேரூர் தலை வர்கள், தென்கடப்ப ந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, கல்லூரி முதல்வர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகரமன்ற துணை தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.

    • புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
    • புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூடல் மாமதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

    தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

    தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்களும் நடைபெற உள்ளன. வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புத்தக கண்காட்சிகளுக்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழின் பெருமையை, சிறப்பை உணருவதற்கு புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன

    ஈரோடு:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டு தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு புத்தக திருவிழாவை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 5 முதல் 16 -ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புத்தக திருவிழா இன்று தொடங்கியது.

    இன்று மாலை துவக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி மூலம் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஊரில் - அறிவுத் திருவிழாவான புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தன்னைப் போன்ற எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, அறிஞர்களை, தமிழ்ப்புலவர்களை, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்தத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாக தொய்வில்லாமல் நடத்தி வருகிறார் ஸ்டாலின் குணசேகரன். அவரது அயராத தமிழ் ஆர்வத்தை அனைவரும் பாராட்ட வேண்டும். இதுபோன்ற ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாக வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஸ்டாலின் குணசேகரன்கள் உருவாக வேண்டும்!

    புத்தக வெளியீட்டு விழாக்களில் கலந்துகொள்வதும், புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. ஏனென்றால் இவை அறிவுத்திருவிழா! தமிழ்த் திருவிழா! தமிழாட்சி - தமிழர்களின் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டில். இத்தகைய தமிழாட்சி நடக்கும் நாட்டில் தமிழ்த் திருவிழாக்களும் அதிகம் நடந்தாக வேண்டும்.

    சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றேன்.

    சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் தான் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்த முதலில் ஜனவரி மாதம் தேதி குறிக்கப்பட்டது. கொரோனா பரவிய காரணத்தால் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே அரங்கம் அமைத்து விட்ட காரணத்தால் பதிப்பாளர்களுக்கு இழப்பும் ஏற்பட்டது. இதனை முன் வைத்து பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். உடனடியாக 50 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!

    வழக்கமாக, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் 75 லட்சத்துடன் இந்த ஐம்பது லட்சத்தையும் சேர்த்து ஒன்றே கால் கோடி ரூபாயை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்த புத்தகப் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

    தமிழின் பெருமையை, சிறப்பை தமிழர்கள் அனைவரும் உணருவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள்தான் அடித்தளமாக அமைகின்றன. பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

    அதனால்தான் என்னைச் சந்திக்க வருபவர்கள் மாலைகள், சால்வைகள், போர்வைகள் அணிவிக்க வேண்டாம், புத்தகங்களைத் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர்தான் புத்தகங்கள்! பொய்யும் புரட்டும் கலந்த பழமைவாதம் எனும் கடலில் சிக்கித் தவிக்காமல், நாம் கரை சேர உதவுகிற பகுத்தறிவுக் கப்பல்கள்தான் புத்தகங்கள்!

    'வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் விரும்பினார்கள். அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாகவாவது அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்! வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்! சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டுங்கள்!

    புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்

    புத்தகத் திருவிழா துவக்க விழாவில் பங்கேற்றவர்கள்

    இளைஞர்களே… நிறைய படியுங்கள்! ஏன்… எதற்கு… எப்படி? என்று கேளுங்கள்! ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள்! அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்! எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்! இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் – அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்! ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்!

    ஆனால், தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம்! பொய்களையும் – கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம்! தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக - பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். எல்லாவற்றுக்கும் ஈரோடு வழிகாட்டியது போல புத்தகத் திருவிழாவுக்கும் வழிகாட்டுகிறது ஈரோடு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.
    • இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.

    மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், ஊரர்டசி ஒன்றியக்குழு துணை தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் இணைந்து புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

    மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர் பண்டரி நாதன்சி, கிளை நூலகர் பச்சையம்மாள் சந்திர சேகர், முத்துச்சாமி, முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    புதுவை எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 22-வது புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. #Bookfair
    புதுச்சேரி:

    புதுவை எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 22-வது புத்தக கண்காட்சி நாளை தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா நாளை மதியம் 12 மணிக்கு நடக்கிறது. எழுத்தாளர் புத்தக சங்க தலைவர் முத்து வரவேற்கிறார்.

    விழாவுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்குகிறார். ராதா கிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகிக்கிறார். கவர்னர் கிரண்பேடி கண்காட்சியை தொடங்கி வைத்து 8 நூல்களை வெளியிடுகிறார். எழுத்தாளர் ரவிக்குமார் சிறப்புரையாற்றுகிறார். பாஞ்.ராமலிங்கம் நோக்கவுரையாற்றுகிறார். இசை கலைவன் வாழ்த்தி பேசுகிறார்.

    கண்காட்சியில் புதுவை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100 புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகிறது. கண்காட்சியில் புதுவை எழுத்தாளர்களின் நூல்களும் இடம்பெறுகிறது. விற்பனையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு.

    கண்காட்சியில் அதிக அளவிலான புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும், எழுத்தாளர்கள், புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

    கண்காட்சியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு, இசை, நடனம், வினாடி-வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. #BookFair
    அரியலூரில் புத்தகதிரு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூரில் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக  விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக திருவிழா நடை பெறுகிறது. 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கிறார். அரசு தலைமை கொறடா, எம்.பி, எம்.எல் .ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உட்பட  பலர் கலந்து கொள்கிறார்கள். 12-ம் தேதி தமிழக பண்பாட்டு துறை அமைச்சர்  பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.

    இதனை முன்னிட்டு அண்ணாசிலையிலிருந்து புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சி தலைவர் சத்திய நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார், முக்கிய கடைவீதிகளின் வழியாக சென்ற பேரணி அரியலூர் யூனியன் அலுவலகத்தில் முடிவடைந்தது. 

    தாசில்தார் முத்துலெட்சுமி, மாவட்ட கல்வி  அலுவலர்செல்வம், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்  நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, தமிழ் பாண்பாட்டு பேரமைப்பு பொறுப்பாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நல்லப்பன், புலவர்.இளங்கோ, ஜமீன்வெங்கடேசன், அரிமா சங்க பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, அசோக்குமார், கோகுல், சங்கர், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    ×