search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுநகர்"

    • மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை திருமங்கலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது," தமிழகத்தின் கதையை எழுதுவதைப் போல நாட்டின் கதையையும் திமுக எழுத நினைப்பதாக" விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    நான் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். மக்கள் என்னை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெற்றி பெறுவோம்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    இந்தியாவை காப்பாற்றுவதாக் கூறும் முதல்வர் முதலில் தமிழகத்தைக் காப்பாற்றட்டும். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் என்று சொல்கிறார்கள். அது காமெடியா இல்லை நிஜத்தில் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
    • திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

    தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

    • விருதுநகரில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு நகராட்சி மைதானத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலா ளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 11.30 மணிக்கு கல்லூரி சாலையில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் உதய நிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திரளான தொண்டர்கள் பொதுக் கூட்ட மேடை முன்பு குவிந்த னர். மதியம் விருதுநகரில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மருத் துவ கல்லூரி கலைய ரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

    • விருதுநகரில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.
    • வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் ஆனந்த் குமார் மாற்றுத்திறனாளிக் கான தேசிய அடையாள அட்டைகளை மாற்றுத்திற னுடைய குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட 60 குழந்தை கள் கலந்து கொண்டனர். இதில் உதவி உபகரணங்கள் வேண்டி 7 மனுக்களும், இலவச பேருந்து அட்டை வேண்டி 20 மனுக்களும் பெறப்பட்டது. இதில் 18 குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகிற 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29-ந்தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தில் 3.10.2023-ந்தேதி எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலை ப்பள்ளியிலும், அருப்புக்கோ ட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5-ந்தேதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10-ந்தேதி எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13-ந்தேதி எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்.

    வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 19-ந்தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21-ந்தேதி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி யிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 26-ந்தேதி நகராட்சி ஏ.வி.டி.உயர்நிலைப்பள்ளியிலும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெற உள்ளது.

    எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவ தற்கு தேவையான ஆவ ணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப் படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இம்முகாமில் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உட்பட பள்ளிக்கல்வித்துறை அலுவ லர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    • மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • அழகம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 75), தனியாக வசித்து வந்தார். இவரது 2-வது மகன் ஆறுமுகம்(42) திருமணம் செய்யாமல் ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து அழகம்மாள் மயங்கி கிடந்தார். அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரியாபட்டி அருகே பால் விற்பனையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
    • அவர் மனவிரக்தியுடன் காணப்பட்டார்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள டி.செட்டிக்குளத்தை சேர்ந்தவர் சபரிமுருகன். தனியார் பால் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அருப்புக்கோட்டைக்கு பால் விற்பதற்காக சென்றார்.

    இந்த நிலையில் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் விடுதி அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் சபரிமுருகனின் சகோதரர் முருகபாண்டி புகார் கொடுத்தார்.

    அதில், கடந்த சில நாட்களாக சபரிமுருகன் ஒரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்ததாகவும், மனவிரக்தியுடன் காணப்பட்டதாகவும் கூறி உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    • ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    • சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும்.

    விருதுநகர்

    விருதுநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கனவே கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசப்பட்டது. அப்போது கருணாநிதி அதனை ஆதரித்தார். நாங்கள் (அ.தி.மு.க.) ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சி யாக இருந்து ஆதரித்தோம்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும்போதும் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் தி.மு. க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப் பாட்டையும் கையாளுகிறது.

    இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் உடனடியாக வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு 8 பேர் கொண்ட பிரநிதித்துவ குழுவை நியமித்துள்ளது. அந்த குழு தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்து, அது நாடாளு மன்றத்திற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சரியான பாதையாகும். இதில் தி.மு.க. நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி வருகிறது. தொழிலாளர் நலச்சட்டம் இயற்றி பாராளுமன்றம், அதன் பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும். அதேபோல் தான் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலும் உடனடியாக கொண்டு வரப்படாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

    மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

    இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர்

    சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர், அழகிய மீனாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கிருதுமால் நதியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை,புண்யாக வாசனம், கோ, லெட்சுமி பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • விருதுநகர் மாவட்ட அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர் தேவதாஸ், சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடந்தது.

    இதில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர். இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-ம் இடமும், கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும் பெற்றனர்.

    ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் இடமும், ஒட்டுமொத்த தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் 2-ம் சேர்ந்து அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்ற மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார்ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா வட்டாரத் துணைத் தளபதி டாக்டர் அருள்செல்வி, சார்பு ஆய்வாளர் தேவதாஸ், எழுத்தர் சிவராமன் ஆகியோரை, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டி கவுரவித்தார்.

    • ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

     ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ், கிழக்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மேற்கு வட்டார தலைவர் கணேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, பொன்.சக்திமோகன், சங்குத்துரை,ராஜ்மோகன், கவுன்சிலர்கள் சங்கர்கணேஷ், புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×